AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 29 அக்டோபர், 2012

முஸ்லிம்களுக்காக புதிதாக ‘ஹஜ் ஹவுஸ்’

புதுடெல்லி: டெல்லி பிண்டாபூரில் நடந்த முஸ்லிம்களின் நிகழ்ச்சியில் முதல்வர் ஷீலா தீட்சித்தின் தனி செயலாளரும் செய்தி தொடர்பாளருமான முகேஷ் சர்மா கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:டெல்லியில் முஸ்லிம்களின் வசதிக்காக துவாரகாவில் புதிதாக ‘ஹஜ் ஹவுஸ்’ என்ற புதிய கட்டி டம் கட்டப்படும். இந்த கட்டிடம் மும்பையில் இருக்கும் ஹஜ் ஹவுஸ் கட்டிடத்தை விட பெரிதாகவும் அதிக நவீன வசதிகளை கொண்டதாகவும் இருக்கும்.நகரில் இருக்கும் எல்லா மதரசாக்களிலும் கம்ப்யூட்டர் வசதி செய்து தரப்படும். அத்துடன் அதிகமாக உருது ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகால் பகுதியில் கட்டப்பட்டு வரும் நூர் மஸ்ஜித்க்காக 400 மீட்டர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மசூதி கட்டுமான பணிகளை கண்காணிக்கும் பொறுப்பு டெல்லி வக்ப் போர்டு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  ஹட்சால் பகுதியில் ஒரு ‘கப்ரிஸ்டான்’ கட்டப்பட்டு வருகிறது. துவாரகா பகுதியில் 3.5 ஏக்கர் நிலத்தில் மேலும் ஒரு கப்ரிஸ்டான் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.பிண்டாபூரில் இருக்கும் பூங்காவிற்கு சுதந்திர போராட்ட வீரர் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பெயர் சூட்டப் படும். அங்குள்ள இன்னொரு பூங்காவிற்கு ஜும்மா பூங்கா என்று பெயர் சூட்டப்படும்.இவ்வாறு முகேஷ் சர்மா கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக