AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தொடர் மழை எதிரொலி: வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்வு…



தொடர் மழையின் காரணமாக வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
/
வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி விளங்கி வருகிறது.
இந்த ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது.
/
இந்த ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியாகும். இந்த ஏரியில் இருந்து  சென்னை மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நாள்தோறும் 76 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வந்தது.
/
இந்த ஏரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரம்பலூர், அரியலூர், செந்துறை, ஆண்டிமடம் , ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக ஏரிக்கு வரும்.
/
இது தவிர சாதாரண காலங்களில் மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீர் கல்லணை வழியாக கீழணை வந்தடையும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும். தண்ணீர் திறப்பு இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா விவசாயிகள் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாததால் வீராணம் ஏரி வறண்டது.
/
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை.
/
இதனால் இப்பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடியை இழந்துள்ளனர். சம்பா சாகுபடி செய்யும் நேரத்திலும் தண்ணீரின்றி இருந்து வந்த நேரத்தில் கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட்டதால் மேட்டூருக்கு தண்ணீர் வந்தது.
/
இதையடுத்து மேட்டூரில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 30-ந் தேதி திறந்து விடப்பட்டது. இதன் மூலம் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர தொடங்கியது.
/
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஏரியின் நீர் மட்டம் 42.20 அடியாக இருந்தது. இந்நிலையில் தொடர் மழையினால் கீழணையில் இருந்து வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் தொடர் மழையும் பெய்து வருவதால் ஏரியின் நீர் மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 43.50 அடியாக உயர்ந்தது.
/
இருப்பினும் ஏரியின் நீர் மட்டம் 45 அடியாக உயர்ந்தால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும்.
மேலும் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விட முடியும். தொடர்ந்து மழை பெய்து வருவதால்
ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். தற்போது விவசாய பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக