டெல்லி: பள்ளிகளில் பாடம் கற்றுக் கொடுப்பது மட்டும் கடமையல்ல மாணவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டியது பள்ளி நிர்வாகத்தினரின் கடமை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வசதிகளை 6 மாதத்திற்குள் ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான முறையில் குடிநீர், கழிப்பிட வசதியின்றி உள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாணவிகளின் நிலைமை கடும் திண்டாட்டம்தான். இதனைக் கருத்தில் கொண்டு
பள்ளிகளில் அடிப்படை வசதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பள்ளிகளில் அடிப்படை வசதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இதனை விசாரித்து தீர்ப்பளித்தனர்.
“நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த உத்தரவினை தனியார் பள்ளிகளும், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் இன்னும் 6 மாதத்திற்குள் மாநில அரசுகளும், பள்ளிகளும் நிறைவேற்ற வேண்டும். இந்த உத்தரவை மீறி 6 மாதத்திற்கு பிறகும் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.” என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக