AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 22 செப்டம்பர், 2012

மனித உடலில் அல்சர் நோய் (குடற்புண்) பற்றிய தகவல்:-



அல்சர் என்றால் என்ன....????
நம் வயிற்றுக்குள்ளே, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கிறது. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டில் காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானால், அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசாக கிழிந்தால் கூட, நேரடியாக வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமாக அடி வயிற்றில் வலி, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காமல் அப்படியே தொண்டையில் உணவு நிற்பது போன்ற ஒரு உணர்வு...... இதெல்லாம் இருக்கும்.... இது தான் அல்சர்....


அல்சர் வர கரணங்கள்:-
முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, மதிய சாப்பாட்டை தள்ளிப் போடுவது, அடிக்கடி காபி, டீயை குடிப்பது...
சாதாரண தலைவலி, காய்ச்சல் என்றதும் உடனே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.
சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் மாத்திரைகள் சாப்பிடுவதும் ஒரு காரணம். ஏதோ சுகமின்மைக்காக மருத்துவரை பார்க்கிறோம். மருத்துவர் "ஆன்ட்டிபயாடிக்" எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கும் போது, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்க வேண்டும். இதை சில மருத்துவர்கள் செய்வதில்லை. மருத்துவர்கள் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கி சாப்பிடுபவர்களும் இருக்கின்றார்கள். சில வகை மருந்துகளை சாப்பிடும் போது, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வருவதை உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள்..... காரணம் இது தான்....

அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இவைகள் அனைத்தும் அல்சர் வருவதற்கு முக்கியமான காரணிகள்....

மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்காக காலங்காலமாக சிலர் மருந்து சாப்பிடுவார்கள். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதற்கேற்றபடி சாப்பாடு இருக்க வேண்டும். இல்லையெனில் அதுவும் அல்சரை ஏற்படுத்தலாம். அபூர்வமாக சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்களுக்கும் அல்சர் இருக்கும்.

எடை குறைவது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம் கூட அல்சரின் அறிகுறிகளாக இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.



அல்சரை முழுமையாக குணப்படுத்திடலாம். வந்ததை போக்க சிகிச்சைகள் உண்டு. வராமல் இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு... சரிவிகித சாப்பாடு இரண்டும் முக்கியம். கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும்.....



அல்சர் வந்தவர்களுக்கு சில உபயோகமான விஷயங்கள்.....
நார்ச்சத்து உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரி கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக் கூட நன்றாக வேக வைத்து, மசித்து சாப்பிட வேண்டும். பாலுக்கு பதில் மோர் அதிகம் சேர்த்து கொள்ளலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். இனிப்புகள், அதிகமாக தாளித்த, பொறித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான "கிரேவி" இதெல்லாம் அறவே தவிர்க்க வேண்டும்.

மூன்று வேளையும் அதிகமாக சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடலாம். எதையும் நன்கு "மென்று" பொறுமையாக சாப்பிட வேண்டும்.



நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்வது போலத்தான் அல்சர் வந்தவங்களுக்கும்...


"விருந்தும் கூடாது... விரதமும் கூடாது".

0 கருத்துகள்:

கருத்துரையிடுக