AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படமெடுத்த அமெரிக்கர் தலைக்கு 1 லட்சம் டாலர்: பாக். அமைச்சர்


இஸ்லாமாபாத்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாக படத்தை வெளியிட்ட அமெரிக்கரை கொலை செய்வோருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது பிலோர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்குதலுக்குள்ளாகின. பாகிஸ்தானிலும் பல்வேறு நகரங்களில்தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறைகளாக வெடித்ததில் மொத்தம் 23 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது பிலோர், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்கரை கொலை செய்தால் 1 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப் போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக குலாம் அகமது பிலோர் கூறுகையில். நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி படம் தயாரித்து வெளியிட்ட அமெரிக்கரை கொல்பவருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு தொகை வழங்கப்படும். பொது மக்கள் தவிர பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தலிபான் மற்றும் அல்- கொய்தா தீவிரவாதிகள் அவரை கொலை செய்தால் கூட அவர்களுக்கும் இந்த பரிசு தொகை பொருந்தும். , ஒருவரை கொலை செய்யும்படி பொது மக்களை தூண்டி விடுவது கிரிமினல் குற்றம்தான். எந்த நீதிமன்றத்திலும் என் மீது வழக்குத் தொடர்ந்தாலும் கவலை கிடையாது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக