AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

கொள்ளுமேடு தமுமுகவின் 2012 பிஃத்ரா விநியோகம்

 தமுமுக &அல் ஹைராத் சமுக சேவை மையத்தின் சார்பில் இந்த ஆண்டும் பிஃத்ரா என்னும் தர்ம்மம் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான   குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது . மேலும் இந்த ஆண்டு சிறப்பு அம்சங்களாக காய்கறிகள் சேர்த்து  வழங்கப்பட்டதை  மக்கள் மிகவும் சந்தோசம் வரவேற்றனர் .  இதுவரை யாரும் செய்திடாத வகையில் தமுமுக  சிறப்பாக விநியோகம் செய்துயுள்ளதை தமுமுகவிற்கு நிகர் தமுமுகதான் என்று  மக்கள் பாராட்டினர் .
எல்லா புகழும் இறைவனுக்கே !
மொத்தம் 126  ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

 வழங்கப்பட்ட   பொருள்கள் 18 அதன் விபரம் ;

அரிசி,சினி ,கோதுமை,து.பருப்பு ,சிக்கன் மசாலா ,எஸ் வி எஸ் ஆயில் , சேமியா ,டால்டா ,பால் , மேரி பிஸ்கட் , 

வழங்கப்பட்ட காய்கறிகள் ;

கத்திரிகாய், தக்காளி பல்லாரி,ஊருளை,தேங்காய் ,ப.மிளகாய் ,கேரட் ,பொதினாமல்லி .

மேற்கண்ட உணவு பொருள்கள் அனைத்து குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

ரமலானில் அறிந்தும் அறியாமலும் செய்த நம்முடைய 'பாவங்களை வல்ல இறைவன் மன்னித்து அருள் புரிவானாக"ஆமின் "

மேலும் சிறப்பு அம்சமாக  





வசூல்  செய்யப்பட்ட பிஃத்ராயும்   , வழங்கப்பட்ட பொருள்கள் விபரத்தையும்  , ஊர் பொதுமக்களுக்காக  வரவு செலவு கணக்குகளை பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டவுடன்  அன்று இரவே  தமுமுகாவின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டதை ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர் .  அல்ஹம்துலில்லாஹ் !!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக