AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 8 ஜூலை, 2012

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக புவி அமைப்பு தகவல் பெற ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக வேளாண்மை துறையில் நிலத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த புவி அமைப்பு தகவல் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக அமைக்கப் பட்டுள்ள அலுவலர்கள் குழுவிற்கு சிறப்பு 5 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. 
புவியியல் ரீதியாக உலக வரைப்படம் உள்ளது. இதி லிருந்து பல்வேறு தகவல்கள் பெற வழிகாணப்பட்டுள் ளது. செயற்கை கோள் உதவியுடன் புவி அமைப்பு அதன் பல்வேறு இடங்களின் தன்மை துறை ரீதியாக தகவல்கள் பெற வழி உண்டு. 
இதில் வேளாண்மை துறையில் அதற்கேற்ப தகவல்களை பெற வழிவகை செய்யப்பட்டுள் ளது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நிலத்தடி நீர், மண் உள்ளிட்டவை களின் தன்மை குறித்து விவரங்கள் செயற்கைகோள் மூலம் பெற்று தரும் பணியை மேற்கொள்ள உள்ளது.
  முதல் முறையாக இது போன்ற திட்ட செயல்பாடு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது இதற்காக வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, தேசிய கணினி மையம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் 10 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழு பூலோக வரைப்படத்தில் கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீரின் தன்மை, மண் வளம் குறித்து தகவல்களை செயற்கோள் மூலம் பெற்று பதிவு செய்யும். இக்குழுவுக்கு 5 நாள் பயிற்சி கடலூர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. 
பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை உதவி செயற் பொறியாளர் சங்கரசேகர் வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் ராதா கிருஷ்ணன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். புவி தகவல் தொழில்நுட்பம் பற்றி பிரவு தொகுப்புரை யாற்றினார். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேம்பாட்டுக் காக செயல்படுத்தப்படும் திட்டகளான தடுப்பணை, குளம் அமைப்பது உள் ளிட்டவைகளுக்கு திட்டத் துக்கு தேர்வு செய்யப்படும் இடம் உரிய பயனை தருமா என்பதற்கு புவி அமைப்பில் இருந்து செயற்கைகோள் மூலம் பெறப்படும் தகவல் பயனுள்ளதாக இருக்கும். 
 இது போன்று மண்ணின் தன்மை அறிந்து கொள்வதால் வேளாண்மை செழிப்பிற்கு வழிவகை செய்யும். இது போன்ற திட்டங்கள் அரசு திட்ட செயல்பாட்டுக்கு மட்டு மின்றி விவசாயிகளுக்கும் பலன் தரும். இதற்கு முக்கிய காரணம் வேளாண்மை செயல்பாடுகளுக்கு சரியான இடத்தை தேர்வு செய்ய புவி அமைப்பு தகவல் வழிகாட்டும் என்றனர் சம்மந்தப்பட்ட துறையினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக