AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 12 ஜூலை, 2012

11ம் வகுப்பு சேர்க்கை விதிகள் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: குறைந்தபட்ச மதிப்பெண்ணை உயர்த்தி, வெளியிடப்பட்ட 11ம் வகுப்பு சேர்க்கை விதிகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த மாணவர்கள் அபிஷேக் மற்றும் மோஹித் குமார். இவர்கள் காமர்ஸ் மற்றும் அறிவியல் இணைந்த 11ம் வகு ப்பு பாடப்பிரிவில் படிக்க விரும்பினர். ஆனால், இப்பிரிவில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் உயர்த்தப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு சேர்க்கை விதிகளில் இதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டு அரசால் சுற்றறி க்கை அனுப் பப்பட்டிருந்தது. இதை எதிர்த்து மாணவர்களின் தந்தை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 201213ம் ஆண்டுக்காக கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவு மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், காமர்ஸ் மற்றும் அறிவியல் இணைந்த பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்த 26,000 மாணவர்களின் விண்ணப்பங்களை பள்ளிகள் தள்ளுபடி செய்துள்ளன.

அறிவியல் பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் 7 கூட்டு புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும் என்று விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது 6 புள்ளிகளாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் ஆங்கிலம், கணக்கு மற்றும் அறிவியலில் பி2 கிரேட் பெற்றிருக்க வேண்டும் என்று விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது சி1 கிரேடாக இருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய விதிகளை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.சிஸ்தானி, இதுகுறித்து அக்டோபர் 8ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி கல்வித்துறை இயக்குநரகத்துக்கும், மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுப்பு தெரிவித்த 2 பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக