AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 23 ஜூன், 2012

பள்ளிகள் திறந்து 20 நாளாகிறது அரசின் இலவச நோட்டு எப்போது வழங்கப்படும்?

சிதம்பரம்: பள்ளி கள் திறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கப்படவில்லை. உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1ம் தேதி பள்ளி கள் திறக்கப்பட்டன. தற்போது காகித விலையேற்றத்தால் பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்களின் விலையும் கடுமை யாக உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் நோட்டு ஒன்று ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்த துவங்கிவிட்ட நிலையில் கடும் விலையேற்றத்தால் மாணவ, மாணவிகள் நோட்டுகள் வாங்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவி களுக்கும் நடப்பு கல்வி யாண்டு முதல் இலவசமாக நோட்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகள் துவங்கப்பட்டு சுமார் 20 நாட்களுக்கு மேலாகியும் நோட்டுகள் வழங்கப்படவில்லை. அரசு நோட்டுகள் வழங்கப்படும் என அறிவித்ததால் பெற்றோர்கள் மாணவர்களுக்கு நோட்டுகள் வாங்கிதராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் பாடங்கள் நடத்த துவங்கி விட்டதால் மாணவர்கள் நோட்டுகள் வாங்கி தருமாறு பெற்றோர்களை கேட்டு வருகின்றனர். எனவே அரசு அறிவித்த நோட்டு புத்தகங்கள் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென்றும் கல்வியாளர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக