AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 23 மே, 2012

பிளஸ் 2வில் 6 பாடத்தில் பெயிலானாலும் உடனடி தேர்வு

திண்டுக்கல்: பிளஸ் 2 தேர்வில் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்தால் மட்டுமே சிறப்பு உடனடி தேர்வு எழுத முடியும் என்ற நிலை இந்த ஆண்டு முதல் மாற்றப்பட்டுள்ளது. அனைத்துப் பாடங்களிலும் பெயிலாகி இருந்தாலும், தேர்வு எழுதாதவர்களும் இந்த ஆண்டு  சிறப்பு உடனடி தேர்வை எழுதலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் நேற்று வெளியாகின. இதில் தோல்வியடைந்தவர்கள் சிறப்பு உடனடித் தேர்வு எழுதி தங்கள் கல்வியைத் தொடரலாம் என்ற நடைமுறை சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. 

இதற்காக 2 பாடங்களில் தவறியவர்கள் உடனடித் தேர்வு எழுதி அந்த ஆண்டிலேயே கல்லூரி செல்ல வழிவகை செய்யப்பட்டது. பின்பு 3 பாடங்கள் தோல்வியடைந்தவர்கள் உடனடித் தேர்வு எழுதலாம் என்ற நடைமுறை மாற்றப்பட்டது. தற்போது இந்த விதிமுறையை மேலும் தளர்த்தி, அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்களும், தேர்வே எழுதாதவர்களும் அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் எழுதலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குனர்(மேல்நிலை) ஆரோக்கியசாமி அறிவித்துள்ளார்.

தோல்வியடைந்த பள்ளி மாணவர்கள் எஸ்.எச். எனக் குறிப்பிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும். வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து பயின்ற பள்ளியிலேயே சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை சரிபார்த்து புகைப்படத்தில் தலைமையாசிரியரின் சான்றொப்பமிட வேண்டும். மிக முக்கியமாக மார்ச் 2012 மேல்நிலைத் தேர்விற்கு மாணவருக்கு வழங்கப்பட்ட பதிவெண்ணை விண்ணப்பத்தின் முதல்பக்கத்தின் மேல் அதற்கு உரிய கட்டங்களில் பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்களுடன் தேர்வுக்கட்டணத்தையும் பணமாக பெற்றுக் கொள்ளலாம். கட்டண விவரம்: ஒரு பாடத்திற்கு ரூ.85, இரண்டு பாடங்களுக்கு ரூ.135, மூன்றுபாடங்களுக்கு ரூ.185, நான்கு பாடங்களுக்கு ரூ.235, ஐந்து பாடங்களுக்கு ரூ.285, ஆறுபாடங்களுக்கு ரூ.335. தேர்வுகள் வரும் ஜூன், ஜூலையில் நடைபெறும். தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சான்று பள்ளி மூலமாக தேர்வு தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக