AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 9 பிப்ரவரி, 2012

தமுமுக மாநில பொதுசெயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிகை அறிக்கை


சங்கரன்கோவில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 7.2.2012 அன்று இரவு நடந்த விரும்பத்தகாத சம்பவம் வருத்தமளிக்கிறது. ஊர்வலத்தில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. மேலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.. இதனால் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தாக்குதலில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கேட்டு கொள்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக