AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 27 பிப்ரவரி, 2012

4 மணி நேரம் பவர் கட் : மக்கள் கடும் அவதி

சென்னை: மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின்வெட்டு, இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் முதல்முறையாக 2 மணி நேரம் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில் நாளொன் றுக்கு 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது.  இதனால் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத மின்வெட்டு நீடிக்கிறது. கிராமப்புறங்களில் 10 மணி நேரம் வரையும் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சுழற்சி முறையில் 8 மணி நேரமும் மின்தடை செய்யப்பட்டது. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரம் தவிர பகலில் 3 மணி நேரம், இரவில் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது. இதனால் தொழில்துறையினரும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் மக்கள் தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர்.

மின் பற்றாக்குறையால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கோபத்தை சமாளிக்க வழி தெரியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது. இதை தவிர்ப்பது குறித்து கடந்த 17 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மின்வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் சீரான மின்தடை ஏற்படுத்தவும், தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை விடவும் அரசு தீர்மானித்தது. அதன்படி, புதிய மின்வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின்வெட்டு திட்டம் இன்று அமலுக்கு வந்தது. சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரமும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்முறையாக 2 மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 சதவீத மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. வணிக பயனீட்டாளர்களுக்கு மாலை 6 முதல் இரவு 10 மணி வரை மின்தடை இருக்கும் என்றும் புதிய மின்வெட்டு மூலம் 1,200 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் என்றும் மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 1-ம் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் Ôமின் விடுமுறைÕ அமல்படுத்தப்பட உள்ளது. ஞாயிறு தவிர, மற்ற 6 நாட்களுக்கு 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் தொழிற்சாலைகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும்.

இதன்படி, ஈரோடு மண்டல தொழில் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமையும், சென்னை தெற்கு மண்டலம், திருப்பத்தூர் பகிர்மான வட்டத்துக்கு செவ்வாய், சென்னை வடக்கு, மதுரை மண்டலத்துக்கு புதன், கோவை மண்டலம் திருப்பூர், நீலகிரி பகிர்மானவட்டம் தவிர்த்து பிற பகுதிகளுக்கு வியாழன், நெல்லை மண்டலம் மற்றும் திருப்பூர், நீலகிரி மின்பகிர்மான வட்டத்துக்கு வெள்ளிக்கிழமை, திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் மண்டலம் திருப்பத்தூர் பகிர்மான வட்டம் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் சனிக்கிழமைகளில் மின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை விடப்படுவதால் சிறு மற்றும் குறுந் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்படும் என தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக