சென்னை: புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார். மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் முழுமையான காப்பீட்டு திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘முதலமைச்சரின் விரிவான பொது காப்பீட்டு திட்டம் என்ற மேம்படுத்தப்பட்ட புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இத்திட்டத்தின் மூலம் ஓர் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் காப்பீடாக 4 ஆண்டுகளுக்கு வழங்கும் வகையிலும், காப்பீட்டு காலம் மேலும் ஓர் ஆண்டிற்கு நீட்டிக்க தக்க வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நோய்களுக்கு காப்பீட்டு வரம்பு ஒன்றரை லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்து பராமரிப்புக்கும், குழந்தை பிறப்புக்கு பின் தேவைப்படும் சிகிச்சைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிய காப்பீட்டு திட்டம் தொடக்க விழா நாளை மதியம் கோட்டையில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா 7 பயனாளிகளுக்கு காப்பீடு திட்ட அட்டையை வழங்கி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய், தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
செவ்வாய், 10 ஜனவரி, 2012
புதிய மருத்துவ காப்பீடு திட்டம் : முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்!
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)






0 கருத்துகள்:
கருத்துரையிடுக