AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 16 ஜனவரி, 2012

இஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா !

அல்ஹம்துலில்லாஹ் ..!!!




நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" ஐந்து மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார்.

பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை "ஆம்னா ஃபாரூகி" என்று மாற்றிக் கொண்டதாக கூறினார்.மேலும்"இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்." என்பதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் "நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்" என்றார் அவர்.

பூஜா லாமா என்ற தனது பழைய பெயரை கொண்டு தன் பழைய வாழ்கையை நினைவு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இஸ்லாத்தை ஏற்ற பின் தனது நடிக்கும் தொழிலையும்,குடி,புகை போன்ற தீய பழக்கங்களை விட்டு விட்டார் ஆனால் இவர் ஆபாசமாக நடித்த படங்களைக்காட்டி இந்த பெண்ணின் மனதை நோகடித்துக் கொண்டிருக்கும் அவலமும் ஒரு புறம நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.அந்த பெண்ணிற்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக