லண்டன்:மனித மூளையின் முக்கிய ஆற்றல்கள் ஒருவருக்கு ஐம்பது வயதைத் தொடுவதற்கு முன்பே குறைய துவங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டன் யூனிவர்ஸிடி காலேஜின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில்தான் மனித மூளையின் முக்கிய ஆற்றல் 45 வயது முதல் குறையத் துவங்குவதாக தெரியவந்தது. பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ மாத இதழ் இந்த ஆய்வு முடிவுகளை பிரசுரித்துள்ளது.
45 வயது முதல்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களை பத்து வருட காலத்துக்கு தொடர்ந்து பரிசோதித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு நடத்தப்பட்ட பத்து வருடங்களில் இவர்களில் எல்லா வயதுக்காரர்களுக்குமே நினைவுத் திறன், பகுத்தாய்வுத் திறன், விளங்கிக்கொள்ளும் ஆற்றல் போன்றவை குறைந்து போயிருந்தன.
அதிக வயது உடையவர்களிடையே இவ்வகையான திறன்கள் குறையும் வேகம் அதிகமாக இருந்தது.
ஆனால் இந்த ஆய்வில் தெரியவந்த ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 45 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் கூட மூளையின் திறன்கள் குறைந்துபோவது கண்டுபிடிக்கப்பட்டது தான்.
மூன்று சதவீதத்துக்கும் அதிகமான ஒரு திறன் இழப்பு இந்த வயதுக்காரர்களிடம் கூட காணப்படுவது தெளிவாகத் தெரிந்தது.
மூளையின் திறன்கள் குறைந்து போவது என்பது அறுபது வயதில்தான் ஆரம்பிகிறது என இதற்கு முன்பு நடத்தப்பட்டிருந்த சின்ன அளவிலான ஆய்வுகள் காட்டியிருந்தன.
ஆனால் அந்த முடிவுகளை பிழையாகக் காட்டுவதாக தற்போதைய ஆய்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன.
முந்தைய ஆய்வுகளும் தற்போதைய ஆய்வும் உடன்படுகிற ஒரு விஷயம் என்னவென்றால், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் கொண்ட வாழ்க்கை முறைக்கும் டிமென்ஷியா எனப்படும் மூளை அழுகலுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதுதான்.
செவ்வாய், 10 ஜனவரி, 2012
50 வயதை தொடும் முன்பே மனித மூளையின் முக்கிய ஆற்றல்கள் குறைகிறது! – ஆய்வில் தகவல்
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







0 கருத்துகள்:
கருத்துரையிடுக