AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 11 ஜனவரி, 2012

துபாய்:25 ஆயிரம் கட்டிடங்கள் டிஃபன்ஸ் அலுவலகத்துடன் இணைப்பு


துபாய்:பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் துபாயில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் பாதுகாப்புத் துறையின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடங்களில் சிறிய, பெரிய என்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பாதுகாப்புத்துறைக்கு தெரியவரும்.
தீவிபத்து மட்டுமல்ல, லிஃப்ட் பழுதாகுதல், வாட்டர் டேங்குகளில் தண்ணீர் குறைதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிக்னல் கிடைக்கும். இதனை துணை இயக்குநர் கர்னல் ஹமதான் அல்ரய்ஸி தெரிவித்தார்.
மேற்காசியாவில் மிகப்பெரிய பாதுகாப்பு மாநாடான இண்டர்ஸெக் 2012 எக்ஸிபிஷன் குறித்து விவரித்தார் ஹமதான்.
25562 கட்டிடங்கள் இவ்வகையில் பாதுகாப்புத்துறை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் கருவிகள் இணைக்கப்பட்ட 29183 கட்டிடங்கள் உடனடியாக பாதுகாப்புதுறை அலுவலகத்துடன் இணைக்கப்படும். அனைத்து கட்டிடங்களையும் பாதுகாப்புத்துறை அலுவலகத்துடன் இணைக்க சட்டப்படி அவற்றின் உரிமையாளர்களுக்கு கடமையாகும். ஆனால், ரெஸிடென்ஸியல் வில்லாக்களுக்கு(வீடுகளுக்கு) இதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம், மருத்துவமனை, ஹோட்டல், தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக