AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 2 நவம்பர், 2011

பாதுகாப்பு கருதி வீராணத்தில் தண்ணீர் வெளியேற்றம்


சிதம்பரம்:தொடர் மழையால் வீராணத்திற்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் பாதுகாப்பு கருதி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.வட கிழக்கு பருவ மழை தொடர்வதால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வடவாறு வழியாக வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட அரியலூர் மாவட்டத்தில் பெய்யும் மழையால் வீராணத்திற்கு செங்கால் ஓடை வழியாக 400 கன அடி, பாளையங்கோட்டை ஓடை வழியாக 100, பாப்பாக்குடி ஓடை வழியாக 50 உட்பட 600 கன அடி தண்ணீர் வருகிறது.
ஏரியின் பாதுகாப்பு கருதி புது மதகு வழியாக வெள்ளாற்றில் 500 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னையிலும் மழை பெய்வதால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவும் குறைக்கப்பட்டு தற்போது 21 கன அடி தண்ணீர் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது.ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்காமல் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது 687 மில்லியன் கன அடி தண்ணீர் ஏரியில் உள்ளது. தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.Thanks    lpt xpress

0 கருத்துகள்:

கருத்துரையிடுக