இந்தியாவின் முதன்முறையாக நடைபெற்ற பார்முலா வன் கார் பந்தய போட்டியில் ஜேர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் எதிர்பார்த்தது போன்றே வெற்றி பெற்று கோப்பையை தனதாக்கினார்.
தலைநகர் டெல்லியின் கிரேட்டர் நொய்டாவில், புத்தா சர்வதேச கார் பந்தய களத்தில், இவ்வருடத்திற்கான பார்முலா 1 கார் பந்தாத்தின் 17 வது சுற்று நடைபெற ஏற்பாடாகியது. நேற்று முன் தினம் இடம்பெற்ற தகுதி சுற்று போட்டிகளில் ஏற்கனவே வென்றிருந்த வெட்டெல், நேற்றைய 17 வது சுற்று போட்டியிலும் நிச்சயம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் இவ்வருடத்திற்கான பார்முலா 1 போட்டிகளுக்காக ஏற்கனவே முடிந்து விட்ட 16 சுற்றுக்களில், ரெட்புல் அணி சார்பில் களமிறங்கிய செபஸ்டியன் வெட்டல், மொத்தம் 349 புள்ளிகள் குவித்து முதலிடம் வகித்து வருகிறர். மேலும் அவரே இந்த ஆண்டுக்கான பார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தையும் தக்க வைத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக