AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 5 நவம்பர், 2011

கல்வியிலும் பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பது குறித்த ஆவணப்படம்.


ஹைதராபாத்: சுல்தான் முஹம்மது குளி குத்துப்ஷா 1591 ல் ஹைதராபாத்தை நிறுவினார். நகரத்தின் தனிப்பட்ட கலாச்சாரம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கவரும் தன்மையுடையது. இருப்பினும் சுதந்திரத்துக்கு பிறகு கல்வியிலும்
பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் நலிவடைந்துவிட்டனர்.
இஸ்லாமிய மாணவர் அமைப்பு ‘சிட்டி ஆப் பியர்ல்ஸ்’ என்ற பெயரில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கும் நிலையை அகற்றும் பொருட்டு இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படம் மதினா கல்வி மையத்தில் எடுக்கப்பட்டது.
பின்தங்கியிருக்கும் இந்நிலையைப் போக்கும் ஆலோசனைகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள்ளது. சமூகத்தாலும் அரசாங்கத்தாலும் புறக்கணிக்கப்பட்ட சேரிப்பகுதிகள் இப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் வெளியீட்டின்போது இந்திய நல்வாழ்வு கட்சியின் பொதுச்செயலாளர் காசிம் ரசூல் அவர்களும், எம்பிஜே அமைப்பின் தலைவர் ஹமீத் முஹம்மது கான் அவர்களும், ஜமாஅத் ஏ இஸ்லாமி அமைப்பின் முக்கிய நபர்களும் இடம்பெற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக