AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 30 நவம்பர், 2011

சளி, ஜலதோஷம் – இந்த மழைக்காலத்தில் பரவ காரணம் என்ன?


காலைல லேட்டா எழுந்தாலே முதல்ல இந்தப் பிரச்சினைதான் வரும். ஸ்கூல், காலேஜ், வேலைக்கு போறவங்க எல்லாரும் பரபரப்பா அப்போ தான் கிளம்பிட்டு இருப்பாங்க. அதனால, எல்லா வேலையும், வீட்ல வேகவேகமா நடக்கும். அந்த வேகத்தில குளிச்சா தலையைக் கூட ஒழுங்கா துவட்ட மாட்டோம்.
பொதுவாக மழைக்காலத்தில் ஜலதோஷத்திற்கு காராணமான கிருமிகள் ஏற்ற வெப்பநிலை அடையும். இதன் காரணமாக எளிதில் இக்கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும். நமக்குள் எளிதில் பரவவும் செய்யும்.
அப்படியே அந்த ஈரத்தலைல எண்ணெயைத் தேய்ச்சிடுவோம். அப்புறம் என்ன ஜலதோஷம்தான். தும்மல், இருமல், மூக்கடைப்பு, தலைவலின்னு எல்லாம் வரிசையா வரும்.
சரி, இந்த ஜலதோஷம் நமக்கு மட்டும்தான் வருதான்னு நீங்க ரொம்ப `பீல் (கவலை)’ பண்ணாதீங்க. அதைப் பற்றி சில தகவலை உங்களுkku நமது கல்வி களஞ்சியத்தில் வாயிலாக பதிவு செய்கிறது.
ஜலதோஷம்ங்கறது ஒருவித அலர்ஜி சம்பந்தமான நோய். இது வந்தா, 3 அல்லது 4 நாட்கள் வரை இருக்கும். இந்த நோய் உலகம் முழுவதும் பரவி இருக்குற நோய் தான்.
மனிதர்களுக்கு `ரைனோ’ என்ற வைரசின் மூலம் ஜலதோஷம் உண்டாகுது.
இந்த நோய்க்கு நிவாரணம் இருக்கு ஆனால் குணப்படுத்தவல்ல எவ்வித சிகிச்சையும் இல்லை!!
இந்த வைரஸ் 130 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்பநிலையை கூடத் தாங்குமாம். இதை முழுமையாக அழிக்க எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லையாம்.
ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எல்லாம் ஜலதோஷத்தால் உருவாகும் தலைவலியை மட்டும்தான் போக்குமாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக