AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 24 நவம்பர், 2011

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி நீடிப்பு!


மும்பை:எண்ணெய் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், வங்கிகள் ஆகியோரிடம் டாலரின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி சாதனை படைத்துள்ளது.
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு தடைபோட வெளிநாட்டு நாணய சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிட்டதை தொடர்ந்து சற்று மதிப்பு மேம்பட்ட போதிலும் அதற்கு முன்பு டாலருக்கு வரலாறு காணாத மிகவும் குறைந்த மதிப்பை ரூபாய் பதிவுச்செய்தது. திங்கள் கிழமை க்ளோஸிங் செய்யும்பொழுது இருந்த மதிப்பை விட 15 பைஸா மேலும் குறைந்து டாலருக்கு 52.29/52.30 ரூபாய் என்ற மதிப்பில் செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகள் முடிவடைந்தன.
ஆனால் இதற்கு முன்பு டாலருக்கு 52.73 ரூபாய் மதிப்பில் இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சியை சந்தித்திருந்தது. பவுண்ட், ஸ்டெர்லிங் உள்ளிட்ட இதர பிரபல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அண்மை காலத்தில் உலகில் நான்காவது மிகப்பெரிய நாணய வீழ்ச்சியை சந்தித்த நாணயமாக இந்திய ரூபாய் மாறியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக