AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 16 நவம்பர், 2011

மோடிக்கு விசா மறுப்பு: நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யமாட்டோம் – அமெரிக்கா


வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்ட நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான காலச்சூழல் உருவாகவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கவே தெற்கு-மத்திய ஆசியாவின் விவகாரங்களுக்கு  பொறுப்பை வகிக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச்செயலாளர் ராபர்ட் ப்ளேக் இதனை தெரிவித்துள்ளார்.
2002-ஆம் ஆண்டு குஜராத்தில் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமாக அரங்கேறிய முஸ்லிம் இனப் படுகொலைக்கு தலைமை தாங்கியதுதான் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்ததற்கு காரணமாகும். அதேவேளையில், குஜராத்தில் முதலீடுச் செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவான சூழல் நிலவுவதாகவும் இதனை பயன்படுத்த முயற்சி செய்வோம் எனவும் ப்ளேக் கூறியுள்ளார்.
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மாநிலங்களிடையே நேரடியாக முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகளை குறித்து ஆராயப்படும் என ப்ளேக் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக