AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 8 நவம்பர், 2011

கடல் சார்ந்த ஆராய்ச்சி, கை நிறைய சம்பளத்துடன் படிக்க ஆசையா!


கடல் சார்ந்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. எண்ணற்ற வளங்களும்,அதிசயங்களும் பொதிந்துள்ள கடல்சார்ந்த தொழில் துறையில் வேலைவாய்ப்புகளுக்கும் பஞ்சம் இல்லை. துறைகளுக்கு தக்கவாறு ஊதியமும் கைநிறைய கிடைக்கும். கடல் வளங்களை ஆராய்ச்சி செய்து  நாட்டின்  வளர்ச்சிக்கு பயன்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர்களுக்கு உதவித்தொகை அளித்து ஊக்குவிக்கிறது.
பல்வேறு கல்வி நிறுவனங்களும் கடல்சார்ந்த பொறியியல், ஆராய்ச்சி படிப்புகளை மத்திய  அரசு உதவித் தொகையுடன் வழங்கி வருகின்றன. கோவாவில் உள்ள மத்திய அரசின் தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன. 2011-12ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Ph.D in Oceanography Science என்ற ஆராய்ச்சி படிப்பில் 15 காலியிடங்களுக்கான சேர்க்கை நடத்தப் பட உள்ளது. ஏதேனும் ஒரு அறிவியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ழிணிஜி/யிஸிதி/ஷிஸிதி போன்ற ஏதாவது ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். வயது வரம்பை பொறுத்தவரை 1.1.2012 தேதிப்படி   28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 5வருடங்கள் வயது வரம்பில் சலுகை உண்டு.www.kalvikalanjiam.com
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆராய்ச்சி படிப்பின் போது மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். வகுப்புகள் வரும் 2012 ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.
www.csio.res.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான விவரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள்  11.11.2011 ஆகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக