AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 2 நவம்பர், 2011

வியாபாரிகள் விதிமீற உடந்தையாக இருந்த 31 அதிகாரிகள் கைதாவார்களா?

சென்னை : விதிமீறி  கட்டிடங்கள் கட்ட வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் 31 பேர் மீது  நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு  தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு:

சிஎம்டிஏ சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் : உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டது. தியாகராயர்நகரில் விதிமுறை மீறிய 39 கடைகளை மூடி  சி.எம்.டி.ஏ. சீல் வைத்துள்ளது. இதனால் பெசன்ட் நகர் போல தியாகராயர்நகர் அமைதியாக காட்சியளிக்கிறது. சில கட்டிடங்கள் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து சி.எம்.டி.ஏ. நடவடிக்கைக்கு தடை உத்தரவு பெற்றுள்ளன. 

வக்கீல் மோகன்: (பொதுநலன் மனு தாக்கல் செய்தவர்) : உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எப்படி சிவில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. இது தவறானது. இதை உடனே நீக்க வேண்டும். ஏற்கனவே விளம்பர பலகைகளை அகற்ற கோரிய வழக்குகளை சிவில் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட் டுள்ளது. அதுபோல சென்னை சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி அந்த தடையை நீக்க வேண்டும். 

அட்வகேட் ஜெனரல் : சட்டப்படி சிவில் நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தில் எந்த தடையும் விதிக்க கூடாது. நீதிபதிகள்: உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் சிவில் நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்தது தவறானது. இதற்கு அடிப்படை சட்ட அறிவே இல்லை என்று தெரிகிறது. இந்த தடை உத்தரவு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரக அமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது. இத்தகைய வழக்குகளை எந்த சிவில் நீதிமன்றமும் விசாரணைக்கே ஏற்க கூடாது. 

இந்த வழக்கில் கடந்த 2006ம் ஆண்டு உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சு தீர்ப்பு கொடுத்திருக்கும் போது இந்த மாதிரி தடை உத்தரவுகளை சிவில் நீதிமன்றம் பிறப்பித்தது சட்டப்படி தவறானது.  எனவே இந்த தடையை நீக்க சி.எம்.டி.ஏ உரிய மனுவை சிவில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டும். விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்த சி.எம்.டி.ஏ. மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் பட்டியலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நாங்கள் கடந்த மாதம் உத்தரவிட்டோம். அந்த பட்டியல் எங்கே?
அட்வகேட் ஜெனரல் : விதிமுறை மீறிய கட்டிங்களுக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் 31 பெயர் அடங்கிய பட்டியலை தற்போது தாக்கல் செய்துள்ளோம். 

(அட்வகேட் ஜெனரல் ஒரு பட்டியலை தாக்கல் செய்தார்) தலைமை நீதிபதி: இந்த 31 அதிகாரிகளின் பெயர் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். அவர்கள் இந்த வழக்கில் அடுத்த விசாரணையின் போது பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவர்களுக்கு சி.எம். டி.ஏ. நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.  துறை நடவடிக்கை ஏன் எடுக்க கூடாது என்று நாங்கள் ஏன் பரிந்துரை செய்யக்கூடாது என்பதற்கு  அந்த அதிகாரிகள் இந்த வழக்கில்  பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட மனுவை சிஎம்டிஏ தரப்பில்  கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் தான்  அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவரும். இதனிடையே விதிமீறி கட்டப்பட்டதாக மேலும் 5 ஆயிரம் கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

 மாநகராட்சி நடவடிக்கை

மாநகராட்சி சார்பாக வக்கீல் பாரதிதாசன் ஆஜராகி, கடந்த 3 ஆண்டுகளில் 1732 கட்டிடங்களுக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது. 132 கட்டிங்களை ஏன் இடிக்க கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. 57 கட்டிடங்களை இடிக்க நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது. 18 கட்டிங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில் 3 அதிகாரிகள் தவறு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு அதிகாரியை   சஸ்பெண்ட் செய்துள்ளோம் என்றார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை வரும் 30ம் தேதி மாநகராட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பட்டியலில் யார் யார்? கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் உள்ள சிஎம்டிஏ அதிகாரிகள் பெயர்கள்: 

உறுப்பினர் செயலாளர்கள்
1.  நசீமுதீன் ஐ.ஏ.எஸ் 
2.  மோகன் ஐ.ஏ.எஸ்.
3.  விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ்
4.  கட்டாரியா ஐ.ஏ.எஸ்
தலைமை பிளானர்கள்
5.  சுபாஷ் சந்திரா
6.  சிவசுப்பிரமணியம்
7.  குருசாமி
மூத்த பிளானர்கள்
8. ரவீந்திரன்
9.  ராஜசேகரபாண்டியன்
துணை பிளானர்கள்
10.  தங்கபிரகாசன்
11.  செல்வகுமார்
12.  பெரியசாமி
13.  நாகலிங்கம்
14.  ராஜேந்திரன்
15.  ஜெயசந்திரன்
16.  கிருஷ்ணகுமார்
17.  ருத்திரமூர்த்தி
18.  துளசிராம்
உதவி பிளானர்கள்
19.   சபாபதி
20.  நாகசுந்தரம்
21. மாணிக்கவாசகம்
22.  நாகராஜன்
23. ராஜேந்திரன்
24. பன்னீர்செல்வம்
25.  முனுசாமி
26. ரவிபிரசாத்
27. மூர்த்தி
28.  கிருஷ்ணகுமார்
29. ராஜாராமன் 
30. பிரேம் ஆனந்த் 
சுரேந்திரன்
31.  பாலசுப்பிரமணியம். 

இந்த பட்டியலை பார்த்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர்  இந்த 31 பேரையும் வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக