AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 20 அக்டோபர், 2011

Steve Jobs – முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு!!


அண்மையில் உலகைவிட்டு மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் (1955 – 2011), ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக இருந்து தகவல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார்! இவர் தான் முதன் முதலில் Codings ஆக இருந்த கம்ப்யூட்டர் துறையை GUI என்று சொல்லப்படும் Graphical User Interface என்னும் எளிய தொழில்நுட்பம் மூலம் சராசரி மக்களாலும் கம்ப்யூட்டரை செயல்படுத்த முடியும் என்பதை நினைவாக்கினார். இவர் வித்திட்ட இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்திதான் Windows போன்ற பல முக்கிய OS போன்றவை உருவாக்கப்பட்டன.
தன் கல்லூரிப் படிப்பை இடையிலேயே விட்டு விட வேண்டிய நிலைக்கு ஆளான போதிலும் கூட, பல தடைகளைத் தாண்டி தகவல் தொழில்நுட்பத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்
இப்படி பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள அவர் நம் வாழ்கையில் முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!
ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் சில அறிய வரிகள்! – இந்த வரிகள் வெற்றி பாதையில் அடியெடுத்து வைக்க விரும்பும் மாணவர்கள் இளைஞ்ர்களுக்கு அவர் வழங்கிய அட்வைஸ்!! :)
* எந்த வேலையைச் செய்தாலும் அதனை விரும்பிச் செய். விரும்பிச் செய்தால் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
* தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். தவறுகள் ஏற்படலாம் தவறுகளை ஏற்று கொண்டு, அதை உடனடியாகச் சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
* வித்தியாசமாக இரு. வித்தியாசமாக சிந்தனை செய்.
* பெரிதாக சிந்தியுங்கள். சிறிய அளவில் தொடங்குங்கள் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அடுத்த நாளை பற்றி மட்டும் சிந்திக்காமல் எதிர்க்காலத்தைப் பற்றி சிந்திக்கவும்.
* வேலையில் சோர்ந்தாலோ அல்லது ஒரு நிறுவனத்தைத் தொடங்கினாலோ உங்களது நிறுவனத்தின் பலத்தையும் பலவீனத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். தேவையில்லை என்று கருதினால் அவற்றை தூக்கி ஏறிய தயங்காதீர்கள்.
* திறமையைப் பொறுத்தே மக்கள் உங்களை எடைப்போடுவார்கள். எனவே, இறுதியாக கிடைக்கும் பலனுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். டிசைன் என்பது எப்படி தோற்றமளிக்கிறது என்பதல்ல, எப்படி செயல்படுகிறது என்பதுதான். எனவே டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பொருள்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிக முக்கியம்.
* ஒவ்வொரு வேலையையும் சிறப்பாகச் செய் வெற்றி மேலும் வெற்றிகளை உருவாக்கும். எனவே வெற்றியை எட்ட எப்போதும் ஆர்வத்தோடு இரு. www.kalvikalanjiam.com
* தொழில் முனைவோராக இருங்கள். ஐடியாக்களை உருவாக்கி அவற்றை செயல்படுத்துங்கள். மனமும் உள்ளுணர்வும் சொல்வதை கடைப்பிடிக்கும் மனஉறுதி இருக்க வேண்டும்.
* வாடிக்கையாளர்களிடமிருந்தும் போட்டி நிறுவனங்களிடமிருந்தும், பங்குதாரர்களிடமிருந்தும் கற்பதற்கு நிறைய விசயங்கள் இருக்கின்றன. நேர்மையாக விமர்சிக்க கற்று கொள்ளுங்கள். தொடர்ந்து கற்க வேண்டும் மேலும் கற்பதற்கு எப்போதும் இடம் இருந்து கொண்டே இருக்கிறது.
* மார்கெட் லீடராக இருக்க முயற்சி செய்யுங்கள்! அடிப்படைத் தொழில்நுட்பத்தை சொந்தமாகவும் உங்களது கட்டுப்பாட்டிலும் வைத்திருங்கள். எதிலும் முதலாவதாக இருங்கள். உங்கள் பொருள், அந்த துறையில் தர நிர்ணயத்துக்கு ஓர் அடையாளமாக இருக்கட்டும்.
* புதிதாக கண்டுபிடிங்க, கண்டுபிடிப்புதான் நீங்கள் முன்னோடியாக அல்லது மற்றவர்களை பின்ப்பற்றுகிறவரா என்பதைத் தீர்மானிக்கும். அத்துடன், சிறந்த பொருள்களை உருவாக்குவதில் ஆர்வமாக இருப்பவர்கள் வேலைக்கு வைத்து கொள்ள வேண்டும்.
* நீங்கள் உருவாக்கிய பொருள்களைப் பற்றி பல்வேறு பின்னணியில் உள்ள வாடிக்கையாளர்களின் கருத்துக்களைக் கேட்டரியுங்கள். அவர்கள் கூறும் கருத்துகள் மிகவும் உண்மையாக இருக்கும்.
இவரது சாதனை தகவல் தொழில்நுட்பத்தின் ஒரு மாபெரும் சகாப்தம் என்றால் அது மிகையாகாது!! ;)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக