AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 26 அக்டோபர், 2011

தமிழகத்தில் மழை நீடிக்கும்

சென்னை : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால், தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. சென்னை உட்பட பல மாவட்டங்கள் நீரில் மிதக்கின்றன. கடலோர மாவட்டங்களில் கனமழை 2 நாள்  நீடிக்கும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி விட்டது. பொதுவாக அக்டோபர் 20 முதல் 24ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு 29ம் தேதிதான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. 

  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மெல்ல ஆந்திரா கடலோரப் பகுதி வரை பரவத் தொடங்கியது.  தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. அதில் தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக முத்துப்பேட்டையில் 90 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று காலை 8 மணி முதல் மதியம் 12 வரை 80 மிமீ மழை பெய்தது.
சென்னையில் அனைத்து சாலைகளிலும் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கடலூரில் 80 மி.மீ மழையும், பழநி, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதியில் 70 மி.மீ மழையும், நீலகிரியில் 60 மி.மீ மழையும், தர்மபுரி பாப்பிரெட்டிபட்டி, பாம்பன், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருத்துறைப்பூண்டி, திருவள்ளுவர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 50 மி.மீ மழையும், காரைக்குடி, ஈரோடு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் 40 மி.மீ மழையும், உத்தமபாளையம், சேலம், திருப்பூர், உடுமலைப்பேட்டை, பெருந்துறை, சத்தியமங்கலம், ராமேஸ்வரம், தொண்டி, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் 30 மி.மீ மழையும் பெய்தது.  

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும், ஒரு சில இடங்களில் 120 மிமீக்கு மேல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சராசரி 43 சதவீதம்: வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை சராசரியாக தமிழகத்தில் 43 சதவீதம் பெய்வது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக சராசரி அளவைவிட அதிகமாகவே மழை பெய்துள்ளது. 2006ம் ஆண்டு கூடுதலாக 15 சதவீதம், 2007ல் கூடுதலாக 21 சதவீதம், 2008ல் கூடுதலாக 31 சதவீதம், 2009ல் கூடுதலாக 12 சதவீதம், 2010ல் கூடுதலாக 42 சதவீதம் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டும் இயல்பை விட அதிகம் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக