மமகவின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி உறுப்பினர், 15 நகராட்சி உறுப்பினர்கள் 44 பேரூராட்சி உறுப்பினர்கள், 7 ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட 156 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர்.( எல்லா புகழும் இறைவனுக்கே )
இவர்களுக்கான பயிற்சி மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் எதிர்வரும் 01.11.2011 செவ்வாய் கிழமை அன்று மாலை நடைபெறவுள்ளது. எழும்பூர் இரயில் நிலையம் அருகில் சிராஜ் மஹாலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தலைமைகழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வெற்றி பெற்றவர்கள் உட்பட பலர் கலந்துக் கொள்கின்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக