AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 26 அக்டோபர், 2011

தேன் குடிங்க! ஹெல்தியா இருங்க!!


தேனில் பல மருத்துவ குணங்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றுள் சிலவற்றை காண்போமா??
மலச்சிக்கலைப் போக்கும். குழந்தைகள் தினந்தோறும் அருந்தினால் கால்சியம், மக்னீஷியம் அளவு அதிகமாகி நல்ல வலிவைத் தரும். பாலுடன் கலந்து கொடுத்தால் இரத்தத்தில் `ஹீமோகுளோபின்’ அளவு அதிகமாகும். 
தினமும் படுக்கைக்குப் போகும் முன்பு ஒரு தேக்கரண்டி தேனை கொடுத்து வந்தால், தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குணமாகி விடும். 
அரை எலுமிச்சை பழச்சாறும், இரண்டு ஸ்பூன் தேனும் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் எல்லாவித அலர்ஜி வியாதிகளும் குணமடையும். இரைப்பை, குடல் புண்களை தேன் குணப்படுத்தும்.
தேன் விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் தசைகளில் வலி, கால்கள், பாதங்களில் பிடிப்பு, முதலியன தேனை அருந்துவதால் நீங்குகிறது.
காலை இரவு தேனை 4 கரண்டி அருந்தி வந்தால் உடல் பருமண், வலிவு குறையாமல் இளைக்கும். தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும். தேன் கோழையை அகற்றும்.
தேன் குடிங்க! ஹெல்தியா இருங்க!! :)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக