AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 20 அக்டோபர், 2011

காபி பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி – ஆராய்ச்சி தகவல்


தினமும் 2 கப் காபி (Coffee) குடிப்பதன் மூலம் பக்கவாத நோய் வருவதைத் தடுக்க முடியும் என ஒரு ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரைச் சேர்ந்த கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுதொடர்பாக ஒரு ஆய்வு நடத்தினர்.
அதாவது 1960களுக்குப் பிறகு சுமார் 5 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட 8 ஆய்வுகளை அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் விவரம்:
பொதுவாக தினமும் 2 கப் காபி குடிப்பவர்களுக்கு பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்பு 14 சதவீதம் குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபோல் 3 அல்லது 4 கப் காபி குடிப்பதால் 17 சதவீதம் வரை ஆபத்து குறையும்.
அதேநேரம் 6 கப் அல்லது அதற்கு மேல் குடிப்பதன் மூலம் பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்பு 7 சதவீதம் மட்டுமே குறையும் என்கிறது அந்த ஆய்வு.
காபியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. குறிப்பாக கெட்ட கொழுப்பால் மூளை பாதிக்கப்படுவதை இது தடுக்கிறது. ஆனால் டீ குடிப்பதால் இந்த பலன் கிடைப்பதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக