லிபியாவில் பொது மக்களின் 6 மாத போராட்டத்துக்கு பின் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சி வீழ்ந்தது. தற்போது ஆட்சி அதிகாரம் புரட்சிபடையினரின் இடைக்கால அரசு வசம் உள்ளது. இருந்தும் சிர்த் நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஏனெனில் இது கடாபி பிறந்து வளர்ந்த சொந்த ஊராகும்.
எனவே, அவரது ஆதரவாளர்கள் சிர்த் நகரில் புரட்சி படையை நுழைய விடாமல் தடுத்து வந்தனர். எனவே, சிர்த் நகரை கைப்பற்றும் நடவடிக்கையில் புரட்சி படை இறங்கியது. இதற்காக கடந்த மாதம் 15-ந்தேதி முதல் கடாபியின் ராணுவம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் போரிட்டு வந்தது. புரட்சி படைக்கு `நேட்டோ' நாடுகளின் ராணுவமும் ஆதரவு அளித்தன.
கடந்த 25 நாட்களாக நடந்த சண்டையில் நகரம் முழுவதையும் புரட்சி படை பிடித்தது. சிரித் நகரின் அரசு ஆஸ்பத்திரி. பல்கலைக்கழக வளாகம் போன்றவை ஏற்கனவே புரட்சி படையின் பிடியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த சண்டையில் நகரின் அடையாளமாக திகழும் மாநாட்டு மையம் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றையும் பிடித்தது.
அதை தொடர்ந்து சிர்த் நகரம் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக புரட்சி படை தலைமை தளபதி முகமது அல்-பயாத் அறிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக