AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 31 அக்டோபர், 2011

கஷ்மீர் மக்களின் மனோநிலை ஆரோக்கியம் குறைந்துவருகிறது


ஸ்ரீநகர்:தொடர்ந்து நடைபெறும் சட்ட-ஒழுங்கு பிரச்சனைகளால் கஷ்மீர் மக்களின் மனோ ஆரோக்கியம் குறைந்துவருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இதுக்குறித்து ஆய்வு நடத்திய ‘ஆக்‌ஷன் ஃபார் இண்டர்நேசனல்- இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் 20 ஆண்டுகளாக கஷ்மீரில் நடந்துவரும் மோதல்கள், குண்டுவெடிப்புகள், ராணுவ நடவடிக்கைகள் மூலமாக அங்கு மனோநிலை பிரச்சனையை சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கஷ்மீர் மக்களிடம் அதிகரித்துவரும் பாதுகாப்பற்ற உணர்வு தாக்குதல் மனோநிலையை உருவாக்குகிறது.சொந்த உறவினர்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகுவதும், கொலைச்செய்யப்படுவதும் தனி நபர்களிடம் பகை உணர்வையும், தாக்குதல் உணர்வையும் ஏற்படுத்துகிறது என கூறு அந்த ஆய்வறிக்கை கஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் நடத்தும் மனித உரிமை மீறல்கள் அம்மக்களின் மனோவீரியத்தை கெடுத்து மனோநிலை ஆரோக்கியத்தை பாதித்துள்ளதாக கூறியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக