AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 5 அக்டோபர், 2011

ருத்ராபூரில் அராஜகம் செய்த காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் – உலமா குழு


டெல்லி:ருத்ராபூரில் ஒருதலை பட்சமாக நடந்த காவல்துறை அதிகாரிகளை ராஷ்ட்ரிய உலமா குழு வன்மையாக கண்டித்துள்ளதுடன் முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 4  முஸ்லிம்களை கொன்றுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ராஷ்ட்ரிய உலமா குழுவின் பொதுச் செயலாளர் டாக்டர்.தஸ்லிம் அஹ்மத் ரஹ்மானி கூறியதாவது “உத்தரகாண்டில் அடுத்த வருடம் தேர்தல் நடக்க இருப்பதாகவும் அதை கருத்தில் கொண்டு சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற கலவரங்கள் நடத்தி வருங்கின்றனர் என்றும் மேலும் அவர்கள் குரானை தொடர்ந்து அவமதிப்பத்தின் மூலம் முஸ்லிம்களை உசுப்பேற்ற நினைக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்”.
காவல்துறையின் மெத்தன போக்கே இரு பிரிவினரிடையே கலவரம் நடப்பதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது; கலவரத்திலும், போலிசின் துப்பாக்கி சூட்டிலும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மாநில அரசு உரிய நிவாரணமும் மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை உலமா குழு விரைவில் பார்வையிடும் என்றும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக