உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் இன்னும் 5 ஆண்டுகளில் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
358 ஆண்டுகால பழைமை வாய்ந்த சலவைக்கல் சமாதியை (தாஜ்மகால்) பார்வையிட ஆண்டுதோறும் ஆக்ராவிற்கு நான்கு மில்லியன் சுற்றுலாப பயணிகள் வருகை தருகின்றனர்.
யமுனை நதி நாளுக்கு நாள் மாசுப்படுதலும், தொழிற்சாலைப் பெருக்கமும், காடுகள் அழிப்பும் தாஜ்மகாலை அழித்து விடும் என்று விழிப்புணர்வு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், சமாதியில் விரிசல் ஏற்பட்டு வருவதாக கடந்த ஆண்டே தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அடிக்கட்டுமானம் மேலும் தளர்ந்து வருகின்றது.







0 கருத்துகள்:
கருத்துரையிடுக