சென்னை : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, தொடர்ந்து நிலைகொண்டிருப்பதால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி ஆலோசனை நடத்தினார்.
மழையால் பாதிக்கப்பட்ட தீபாவளி திருநாள்:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை இரு நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைபோல இல்லாமல் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, பருவ மழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து ஆந்திர கடலோர பகுதி வரை தென்மேற்கு வங்கக் கடலில், 2 நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மழையால் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட முடியாமல் மக்கள் திண்டாடினர். பட்டாசு விற்பனையும் மந்தமானது. வாங்கிய பட்டாசுகளை வெடிக்க முடியாமல் சிறுவர்கள் தவித்தனர். மழை விட்ட நேரத்தில் பட்டாசுகளை வெடித்தனர்.
இடயுடன் கூடிய மழை:
தொடர் மழையால் சென்னை நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வடசென்னை, தென்சென்னை பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சென்னையில் நேற்று காலை தொடங்கி, இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 56.8 மி.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 43.மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் தொடர்ந்து கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
40ஆயிரம் நெல் மூட்டைகள் நீரில் நனைந்து சேதம்:
இதையடுத்து கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாளடி நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாகை கோட்டத்தில் உள்ள 50&க்கும் அதிகமான அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் நெல் மூட்டைகள் நீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.
தொடர் மழையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்கிறது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 4&வது நாளாக இன்றும் மழை கொட்டியது. கன மழையால் புதுச்சேரியின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதற்கிடையே, கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து கோட்டையில் உயர் அதிகாரிகளுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக