AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 22 செப்டம்பர், 2011

குஜராத்தில் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே வளர்ச்சி – அதனால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை – மல்லிகா சாராபாய்


கோழிக்கோடு:குஜராத்தில் வேகமான வளர்ச்சி என்று ஆர்பரிக்கும் அதே வேளையில் அதற்க்கு இரையான-அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை என்று பிரபல  நடன கலைஞரும் சமூக ஆர்வலருமான பத்மஸ்ரீ டாக்டர் மல்லிகா சாராபாய் கேரளா பல்கலைகழக மாணவர்களிடம் கூறினார்.

மேல்தட்டு மக்கள் மட்டுமே அங்கு வளர்ச்சி அடைந்துள்ளார்கள். அதை ஆரவாரத்துடன் வெளிக்கொண்டுவர, விளம்பரத்துக்காக மட்டுமே கோடிக்கணக்கில் பணம் ஊடகங்களுக்கு வாரி வழங்கபட்டுள்ளது.
இவர்களின் இத்தகைய கவர்ச்சிகரமான விளம்பரங்களால் தொழில் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை வெளி உலகம் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார் என்பதற்க்கு மக்களின் அமோக ஆதரவு மோடிக்கு இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலயே குஜராத்தில் பிஜேபி ஆட்சியை பிடித்தது. குஜராத்தில் பிஜேபியை தோற்கடிக்க நினைக்காமல் காங்கிரசார் தங்கள் வேட்பாளரை தோற்கடிக்க தங்களுக்குள் குழிபறி வேலையில் ஈடுபட்டனர். இதனால் பிஜேபிக்கு காரியங்கள் இலகுவாகியது.
சாதாரண குடிமக்களும் பிற்படுத்தப்பட் தாழ்த்தப்பட்டவர்களும் பிஜேபிக்கு எதிரானவார்களே என்றும் அவர் கூறினார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக