AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 8 மே, 2012

கொள்ளுமேடு பொது மக்களுக்கு ஓர் நர்செய்தி


கொள்ளுமேடு அல் அமான் நர்சரி&பிரமேரி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைப்பெற்று வருவதை தங்கள் அறிவீர்கள். அல்லாவின் மாபெரும் கிருபையால் இன்று அல் அமான் பள்ளிக்கு தமிழ் நாடு அரசு ஒப்புதல் கிடைத்துயிருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ் 
என்பதை பள்ளியின் தாளாலர் அமானுல்லாஹ் பொது மக்களுக்கு  மகிழ்ச்சிவுடன் தெரிவித்தார். மேலும் தங்களின் ஆதரவும் பள்ளியின் வளர்ச்சிக்கு தாங்கள் அனைவரும் இறைவனிடம் பிராத்தனை செய்யுமாறு 

  • கொள்ளுமேடு டைம்ஸ்

    இணைய தளத்தின் முலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.    AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU

    APPROVED BY TAMILNADU GOVERNMENT
    REG NO: 03/165/2012
     


 
 

திங்கள், 7 மே, 2012

ஜூன் 6ல் வெள்ளி கிரகம் வெறும் கண்ணால் பார்க்க கூடாது : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுக்கோட்டை: வரும் ஜூன் 6ஆம் தேதி வெள்ளி கிரகம், சூரிய தட்டு வழியே கடக்கும் அபூர்வ நிகழ்வு நடக்கிறது. அப்போது யாரும் வெறும் கண்ணால் சூரியனை பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளி கோளானது சூரிய தட்டின் வழியே ஒரு புள்ளி போன்று நகர்ந்து செல்லும் வெள்ளி இடைநகர்தல் நிகழ்வு வரும் ஜூன் 6ம் தேதி வானில் நிகழ்கிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரப்புதலுக்கான தேசியக்குழுவின் உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது: ஜூன் 6ஆம் தேதி வெள்ளி கோள் சூரிய தட்டு வழியே ஒரு புள்ளி போன்று கடந்து செல்கிறது. இதனை இந்திய நேரப்படி காலை 5.30 மணி முதல் 10 மணி வரை தொலைநோக்கிகள் மூலம் காணலாம். இது ஒரு அற்புத நிகழ்வு.  வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பாதுகாப்பான முறையில் இந்த அரிய நிகழ்வை அனைவரும் காண வேண்டும்.  இதுபோல் 1641ஆம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை 7 முறை மட்டுமே தெரிந்துள்ளது. இதன் பிறகு டிச.2017ல் தான் இது நிகழும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெள்ளிக்கோளின் இடை நகர்வு நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொலைநோக்கி மூலமாக பார்க்க ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.

செவ்வாய், 1 மே, 2012

ஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்!

நாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகிறது. இதயத்திற்கு இதம் தரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தோடு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

ஆயுள் அதிகரிக்கும் தயிர்

தயிர் அதிசயம் மிக்க உயிருள்ள உணவு. தயிரின் மகத்துவம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே 3000 வருடங்களுக்கு முன்பே மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது.

தயிரில் லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. நமது கிராம மக்கள் கூறுவது போல் "ரத்தம் செத்துப்போகாமல்'' செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்சன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும்.

தயிரிலுள்ள கால்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிக அளவில் செல் உருவாக தயிர் உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவும். வழி வகுக்கிறது. இது பி. காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைபாட்டை தவிர்க்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. தோலை மினு மினுப்பாக வைக்கிறது.

இதயத்தை சீராக்கும் மீன்

மீன் மனிதனின் ஆயுள் மற்றும் அறிவை வளர்க்கும் திறன் கொண்டது. 30 வருடங்கள் முன்பு அலாஸ்காவில் மற்றும் பின்லாந்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு இதயநோய் வராமலே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு ஆராயும்போது அவர்கள் தினமும் அதிக அளவு மீன் சாப்பிடுவதுதான் காரணம் எனத் தெரிந்தது.

மீனிலிருந்து ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு கிடைப்பதால் அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இருதய துடிப்பை சீராக வைக்கும். திறமை மீனுக்கு உண்டு.

இதயத்திற்கு ஏற்ற சாக்லேட்

பனாமா நாட்டைச் சேர்ந்த சன்ப்ளாஸ் தீவில் வாழும் மக்களுக்கு உள்நாட்டு பகுதியில் வாழ்வோரைக் காட்டிலும் 6 மடங்கு குறைவாகவே இதயநோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் தண்ணீர் சாப்பிடுவது போல அவர்கள் எக்கச்சக்கமாக தினம் கோகோ பானம் அருந்துவது தான். இதிலுள்ள இசபிளரனாய்ட்ஸ் என்ற பொருள். ரத்தக்குழாய்களை இளமையாக வைக்கிறது. இதனால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் உடலின் பல பாகங்களுக்கும் பாய்வதால் அவர்களிடம் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு சர்க்கரை நோய் மூளைச்சிதைவு நோய் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் டார்க் சாக்லேட்தான் சாப்பிடவேண்டும். மில்க் சாக்லேட்டில் செறிவு கொழுப்பு இருப்பதால் அதனால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்காது.

கருப்பு திராட்சை சத்துக்கள்

கருப்பு திராட்சையில் உள்ள சத்துக்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினம் தினம் கறுப்பு திராட்சை சாப்பிட்டால், தலைமுடி நரைக்காமல், இரும்பு போன்ற இதயத்துடன் வாழலாம். அதேபோல் பாதாம், முந்திரி, காரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் செறிவற்ற கொழுப்பு உள்ளதால் அவை இதயத்தை பாதுகாக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

அமெரிக்காவை விட ஒகினாவா என்ற ஜப்பானிய தீவில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 மடங்கு அதிகம். இதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்குதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. ஆலிவ் எண்ணெய் அளவிற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. இவற்றில் வைட்டமின் தாதுப்பொருட்கள் மற்றும் அபூர்வமான ஆன்டி ஆக்சிடேன்ட்டு உள்ளன.

ஆலிவ் ( olive) என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஆலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரிய வந்துள்ளது. ஆலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி சாலட்களில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இதயத்தை காக்கும்.

மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.

அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மாதுளம்பூவின் பயன்கள்

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்;த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

*வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

*வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

*ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

*பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

*வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.

*அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

*வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

*இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

*வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். 

*இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் தோல்வி: 4 ஆண்டுகளில் செலவானது 35% மட்டுமே!

புதுடெல்லி, ஏப்ரல் 29 : இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக 11-ஆம் ஐந்து ஆண்டுகள் திட்டத்தில் உட்படுத்திய நலத்திட்டங்கள் வீணானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான திட்ட கால அளவில் சிறுபான்மையினர் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட நிதிகளும், நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களும் பலன் தரும் வகையில் உபயோகப்படுத்தவில்லை என்று இதுக்குறித்து ஆய்வுசெய்த திட்டக்கமிஷன் சிறுபான்மை விவகார ஸ்டியரிங் கமிட்டி உறுப்பினர் கவ்ஹர் ராஸா, ஃபவுண்டேசன் ஃபார் சிவில் லிபர்டீஸ் தலைவர் எம்.ஹிலால், சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் அடங்கிய குழு கூறுகிறது.
11-ஆம் ஐந்தாண்டு திட்டத்தின் கால அளவில் சிறுபான்மை நலனுக்காக 1,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகள் கழிந்த பொழுது இத்தொகையின் 35 சதவீதம் மட்டுமே(487 கோடி ரூபாய்) செலவழிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து பெருந்தொகை இந்திரா வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட இதர பொதுத் திட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நிதிகளின் பற்றாக்குறை, திட்டங்களை அமலாக்குவதை கண்காணிக்கும் அமைப்பின் வீழ்ச்சி, இதர தொடர் நடவடிக்கைகள் இல்லாமை, அரசு அமைப்புகளில் வேரூன்றிய வகுப்புவாத காரணிகள் ஆகியன சிறுபான்மை திட்டங்கள் தோல்வி அடைய காரணம் என இதுக்குறித்து ஆய்வுச் செய்த குழு கூறுகிறது. ஆனால், அரசின் ஆர்வமின்மை காரணமாக பெரும்பாலான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஆய்வுக்குழு கூறுகிறது.
சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும், குறிப்பாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் திட்டமிடப்பட்ட நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தேசம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எல்லா துறைகளில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று சச்சார் கமிட்டி கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து அரசு ஏராளமான சிறுபான்மையினர் நலத்திட்டங்களை அறிவித்தது. ஆனால், இவை 90 சிறுபான்மையினர் வசிக்கும் மாவட்டங்களுடன் ஒதுங்கியது. அதில் பெரும்பான்மையான திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார். இம்மாவட்டங்களில் நிறுவப்பட்ட பள்ளிக்கூடங்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து 10 அல்லது 20 கிலோமீட்டர் தொலைவில் ஆகும்.
கீழ்மட்டத்தில் இத்திட்டங்கள் குறித்து கண்காணிக்கும் அமைப்பு இல்லாமையும், அரசு கட்டமைப்புகளில் ஊடுருவியுள்ள வகுப்புவாத சக்திகளும் சிறுபான்மை நலத்திட்டங்களுக்கு தடையாக மாறின என்று எஸ்.எம்.ஹிலால் கூறுகிறார்.
போதுமான விகிதம் இல்லை என்று கூறி சிறுபான்மை நலத்திட்டங்களுக்கான நிதியை பல்வேறு மாநிலங்கள் செலவழிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளன. மாவட்டங்களை தேர்வுச் செய்வதற்கு பதிலாக பஞ்சாயத்து ப்ளாக்குகளுக்கு நிதியை நேரடியாக அளிக்கவேண்டும் என்றும், நகர பகுதிகளை இத்திட்டங்களில் சேர்க்கவேண்டும் என்றும் ஹிலால் கோரிக்கை விடுத்துள்ளார்.
11-வது ஐந்தாண்டு திட்டத்தில் எஸ்.சி பிரிவினருக்கு தனிநபர் விகிதம் 1,228 ரூபாய் ஆகும். எஸ்.டி பிரிவினருக்கு தனி நபர் விகிதம் 1,450 ரூபாய் ஆகும். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு தனிநபர் விகிதம் ரூ.138 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பத்து மடங்கு அதிகரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைபாடுகளை சுட்டிக்காட்டி இக்குழுவினர் திட்டக்கமிஷன் உறுப்பினர்களை சந்தித்தனர். இதற்கு தீர்வு காண்பதற்கான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் மற்றும் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கவேண்டிய திட்டங்களின் வழிகாட்டுதல் ஆவணம் ஆகியவற்றை திட்டக் கமிஷனுக்கு இக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.

தினத்தந்திக்கு தமுமுக மறுப்பு


J. S. ரிபாயி (தலைவர், தமுமுக)
28/04/2012

பெறுநர்:
ஆசிரியர் தினத்தந்தி சென்னை

அன்புடையீர், தங்கள் பணி சிறக்க பிராத்திக்கிறோம்.

எளிய தமிழர்களின் இனிய குரலாக வெளிவரும் தினத்தந்தி குடும்பத்துக்கும், எமக்கும் இடையில் ஆழமான உறவு உண்டு. அய்யா. ஆதித்தனார் காலம் தொட்டே அது பிரிக்க முடியாத பெரும் உறவாக வளர்ந்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களும், தலித் மக்களும், பலகீனமான சிறுபான்மை சமூக மக்களும் தங்களின் தினசரி பொது அறிவை வளர்க்கும் அறிவுக்கண்ணாடியாக தினத்தந்தியை பார்க்கிறார்கள்.
தினத்தந்தியின் சிறப்பே, அது யாரையும் காயப்படுத்தாத அறிவாயுதம் என்பதுதான்.
இந்நிலையில், ஏப்ரல் 28-2012 அன்று தினத்தந்தியில் வெளியான தலையங்கம் எமக்கு அதிர்ச்சியை அளித்தது.
இந்தியாவில் வாழும் 20 கோடி இந்திய முஸ்லிம்களையும், ஏனைய சிறுபான்மையினரையும் காயப்படுத்தும் வகையில் சில வாசகங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் எழுதப்பட்டுள்ளது வருத்ததிற்குரியது. நமது தினத்தந்தி பத்திரிக்கையிலா இப்படி? என ஒரு கனம் திகைக்க வேண்டி வந்தது.
அது குறித்து சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறோம்.
இந்திய முஸ்லிம்களில் 99 சதவீதம் பேர் இந்த மண்ணின் புதல்வர்கள். அவர்கள் வேறு தேசங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர். சமூக நீதியையும், மனித உரிமைகளையும், சமத்துவத்தையும் பெற வேண்டி இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றவர்கள். அவர்கள் இந்தியாவில் பெறும் சில சலுகைகள் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையாகும். அரசு வழங்கும் சலுகைகளில் 50 சதவீதம் கூட அவர்கள் முழுமையாக பெற முடியவில்லை என்பதை அரசு புள்ளி விவரமே கூறுகிறது. முஸ்லிம்கள் கல்வி வேலைவாய்ப்புகளில் - இடஒதுக்கீட்டில் கூட தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே அனுபவிக்கிறார்கள். அவர்களது வாழ்வு நிலை தலித்துகளின் நிலைகளை விட மோசமாக இருப்பதாக மத்திய அரசு நியமித்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை தெளிவாக அறிவிக்கிறது.
தங்களுக்கு கிடைக்கும் உரிமைகள், சலுகைகளை விட இம்மண்ணில் வாழும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களோடும் அமைதியோடும், நல்லிணக்கத்தோடும் வாழ்வதையே பேரின்பமாக கருதுகிறார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தானில் வாழும் எமது தொப்புள் கொடி உறவான சிறுபான்மை இந்துக்கள் சந்திக்கும் இன்னல்களை குறித்து அத்தலையங்கம் கவலை தெரிவித்தது நியாயமே. அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
சிறுபான்மை சமூகங்கள் எங்கு, எந்த நாட்டில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதே எமது நிலைபாடாகும். இந்தியாவில் முஸ்லிம்கள், இலங்கையில் தமிழர்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், எகிப்தில் கிறிஸ்தவர்கள் என உலகமெங்கும் வாழும் சிறுபான்மையினர் எமது சொந்தங்கள் ஆவார்கள். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் துடைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலையாகும்.
பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பும், வழிபாட்டு உரிமைகளும், வாழ்வுரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்ற அந்நாட்டின் உச்சநீதிமன்ற கருத்தை நாங்களும் உறுதியாக வழிமொழிகிறோம். அது அவர்களது உரிமைகளாகும்.
ஆனால், அவர்களின் உரிமைக்காக பரிந்து பேசுகிறோம் என்ற பெயரில் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்கள் அரைகுறையாக அனுபவிக்கும் சில சலுகைகளையும், நியாயமான உரிமைகளையும் கோடிட்டு காட்டி தலையங்கம் வரைவது ஆரோக்கியமான ஒன்றா? என்பதை நடுநிலை நாளேடான எமது தினத்தந்தி குடும்பத்தாரின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம்.
பாகிஸ்தான் ஒரு மதச்சார்புள்ள நாடு. ஆனால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற உயரிய நாடு. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
1992 டிசம்பர் 6 ஆம் நாளில் இந்தியாவில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள மதவெறியர்கள் சிறுபான்மை இந்துக்களின் கோயில்களை சேதப்படுத்தினார்கள்.
ஆனால், பாகிஸ்தான் அரசு இடிக்கப்பட்ட கோயில்களை புனரமைத்து பாஜக தலைவர் அத்வானியை அழைத்து திறந்து வைத்ததை உலகம் அறியும். ஆனால் பாபர் மசூதியை 100 நாட்களில் மீண்டும் கட்டித்தருகிறோம் என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அறிவித்தது என்னவாயிற்று என்பதும் நமக்கு தெரியும்!
இறுதியாக ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தியா-பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் சில சுயநல அரசியல்வாதிகளால் கூறுபோடப்பட்டபோது, பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்ற முஹம்மது அலி ஜின்னா, இந்திய முஸ்லிம்களின் தலைவராக திகழ்ந்த காயிதே மில்லத்திடம் “உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்” என கேட்டபோது, “எங்களுக்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுங்கள், அதுபோதும்” என்றார். இது வரலாற்று ஆதாரம்.
அதுவே எமது நிலையாகும். இதை எமது உறவுக்கார நாளேடான தினத்தந்தி ஆசிரியர் குழுவுக்கும் நினைவூட்டுகிறோம்.
இப்படி ஒரு தலையங்கம் கவனக்குறையாக கூட எழுதப்பட்டிருக்கலாம். ஒரு மருத்துவர் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்வது எவ்வளவு ஆபத்து என்பதை எப்படி உணர்ந்திருக்க வேண்டுமோ அதே போன்ற பொறுப்பு பத்திரிக்கை சகோதரர்களுக்கும் உண்டல்லவோ? நீங்கள்தானே ஜனநாயகத்தின் விழிகளாகவும், செவிகளாகவும் இருக்கிறீர்கள். அந்த உரிமையால்தான் இதை சுட்டிக்காட்டுகிறோம்.
அதே நேரம் இந்த ஒன்றினால் நமது உறவு பாதிக்காது. பாதிக்கவும் விடக்கூடாது. அப்பொறுப்பு உணர்வு நம் அனைவருக்கும் உண்டு என்பதை ஒருவருக்கொருவர் உரிமையோடு புரிந்து கொள்வோம்.

நன்றி,

தோழமையுடன்,
J.S. ரிபாயி

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

50 ஆண்டுகால மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதமரின் திமிர் அறிக்கை!


கொழும்பு:இலங்கை தம்புள்ளை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வணக்கங்களில் ஈடுபட்ட மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் டி.எம்.ஜெயரத்னா திமிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது மோசடி அறிக்கைக்கு அரசில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
60 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதை அகற்றும் முயற்சியை நிறுத்தாவிட்டால் சட்டரீதியான பிரச்சனைகள் எழும் என்று நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தம்புள்ளையில் உள்ள மஸ்ஜித் மீது வெடிக்குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் மறு நாள் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் தொழுகைக்காக சென்றபோது புத்த பிக்குகள்(சாமியார்கள்) அராஜகமாக தடுத்தனர். ‘மஸ்ஜிதை மூடாவிட்டால் இடிப்போம்’ என மிரட்டல் விடுத்தனர்.
தம்புள்ளை பகுதி, புத்தர்களின் புனித இடம் என்று கடந்த 1982-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. புத்தர்களின் புனித இடமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் ஏதும் கட்டப்படக் கூடாது; இங்கு அனுமதியில்லாமல் மஸ்ஜித் கட்டப்பட்டிருக்கிறது என்று புத்த பிக்குகள் திமிர்த்தனமாக கூறிவருகின்றனர்.
ஆனால், மஸ்ஜித்  50 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாகவும், அது சட்டப்பூர்வமானது என்றும் முஸ்லிம்கள் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார், புத்த பிக்குகளை கலைந்து போகச் சொல்வதற்குப் பதிலாக, மஸ்ஜிதிலிருந்து வெளியேறிவிடுமாறு முஸ்லிம்களிடம் கூறியிருக்கின்றனர். இதன் பிறகு மஸ்ஜித் மூடப்பட்டு, அங்கு போலீஸ் காவல் போடப்பட்டது.
இதையடுத்து, மூத்த அமைச்சர் ஏ.எச்.எம். ஃபவ்ஸி மற்றும் துணை அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் தம்புள்ளையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மஸ்ஜிதை திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
இந்நிலையில், மத விவகாரங்களுக்கான அமைச்சரும் பிரதமருமான ஜெயரத்னா, கொழும்பு நகரில் முஸ்லிம் தலைவர்களுடனான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம பேசிய அவர், மஸ்ஜிதை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், பிரதமரின் இந்தக் கருத்தை அமைச்சர் ஃபவ்ஸி மறுத்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாகவும், மஸ்ஜிதை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இதை மேற்கு மாகாண ஆளுநர் ஆலவி மெளலானா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தம்புள்ளையில் நேற்று(திங்கட்கிழமை) நடந்த கூட்டமொன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவது பற்றிய தீர்மானத்தை பள்ளிவாசல் நிர்வாகமும் முஸ்லிம் மத தலைவர்களும் பிரதேச மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா.