AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 15 செப்டம்பர், 2011

உலகிலேயே மிகச்சிறிய மீன் தொட்டி மாணவர் அசத்தல்

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படிப்பவர் கவிபிரசாந்த். இவர், செல்லப்பிராணிகள், வண்ண மீன் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். மிகச்சிறிய மீன் தொட்டி ஒன்றை தயாரித்து, அதில் மீன் வளர்க்கிறார். இதுபற்றி கவிபிரசாந்த் கூறியதாவது: சமீபத்தில் நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் உலகிலேயே மிகச்சிறிய மீன் தொட்டி ஒன்றை உருவாக்கியதாக அறிந்தேன். 

அது 3 செ.மீ நீளம், 2.4 செ.மீ அகலம், 1.4 செ.மீ உயரம் கொண்டது. அந்த தொட்டியில் 10 மி.லி தண்ணீரை விட்டு 2 சிறிய மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. இதைவிட சிறியதாக மீன் தொட்டி ஒன்றை ஒரே நாளில் உருவாக்கினேன். அது 2.8 செ.மீ நீளம், 2.3 செ.மீ அகலம், 1.3 செ.மீ உயரம் கொண்டது. இதில் 7.5 மி.லி தண்ணீரை விட்டு ஜீப்ரா ரகத்தை சேர்ந்த 4 மீன் குஞ்சுகளை விட்டுள்ளேன். இதை கின்னஸ் சாதனைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக