AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 15 செப்டம்பர், 2011

கல்வி, வேலை வாய்ப்புகள் ஏராளம் முயன்றால் வெற்றி வசப்படும்

புவியியல் துறைக்கு சிறப்பான எதிர்காலம்

புவியியல் அல்லது மண் அறிவியல் துறையும் மற்ற துறைகளைப் போல வளர்ந்து வருகிறது. பூமிக்கடியில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை ஆராய்வது, மண்ணுக்கடியில் உள்ள பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் உள்ளிட்ட விலைமதிக்க முடியாத மூலப்பொருட்களை வெட்டி எடுப்பது (சுரங்கம்) ஆகியவை புவியியல் துறையினரின் வேலை. உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இத்துறையில் வேலை கொட்டிக் கிடக்கிறது. அலுவலகம் அல்லது ஆய்வகத்துக்குள் இருந்தபடியும் பணிபுரியலாம். களப்பணியிலும் ஈடுபடலாம். பணி நேரம் வேலையின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். குறிப்பாக சுரங்கங்களில் பணியில் ஈடுபடுபவர்கள் வார அல்லது மாதக் கணக்கில் கூட குடும்பத்தினரை பிரிந்து அழுக்கான சூழலில் பணிபுரியவும் நேரிடும்.  சம்பளத்தைப் பொறுத்தவரை, தனிப்பட்ட திறமை, அனுபவம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். தனியார் அல்லது அரசு ஆராய்ச்சி நிறுவனங்களில் நல்ல சம்பளம் கிடைக்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் திறமையான புவியியல் வல்லுநர்களுக்கு அதிக சம்பளம் தர தயாராக உள்ளன.  நம் நாட்டில் 75 பல்கலைக்கழகங்கள் புவியியல் துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகின்றன. 12ம் வகுப்பு படித்தவர்கள் இளநிலை (பிஎஸ்ஸி) படிப்பில் சேரலாம். 

கெயில் நிறுவனத்தில்  பொறியாளர் வேலை

மத்திய அரசுக்கு சொந்தமான கெயில், எரிவாயு கண்டுபிடிப்பு, உற்பத்தி, பிராசசிங், டிரான்ஸ்மிஷன், விநியோகம் மற்றும் விற்பனை ஆகிய பணிகளில் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எரிவாயு பயன்பாடு அதிகரித்து வருவதால் கெயில் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிறுவனத்தில் பொறியியல் மற்றும் மனிதவள பிரிவுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எக்சிகியூடிவ் பழகுநர் (மெக்கானிக்கல்) 45,  எக்சிகியூடிவ் பழகுநர் (எலக்ட்ரிகல்) 21, எக்சிகியூடிவ் பழகுநர் (இன்ஸ்ட்ருமென்டேஷன்) 18, எக்சிகியூடிவ் பழகுநர் (கெமிக்கல்) 11, எக்சிகியூடிவ் பழகுநர் (சிவில்) 3, எக்சிகியூடிவ் பழகுநர் (டெலிமெட்ரி) 3, எக்சிகியூடிவ் பழகுநர் (எச்ஆர்) 5 ஆகிய பிரிவிகளில் மொத்தம் 106 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  வயது, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு கெயில் நிறுவனத்தின் ஷ்ஷ்ஷ்.ரீணீவீறீஷீஸீறீவீஸீமீ.நீஷீனீ   இணையதளத்தை பார்க்கவும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், உரிய விவரங்களுடன் 10-09-2011-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்கள் செப்டம்பர் 3 - 9 நாளிட்ட எம்ப்ளாய்மென்ட் இதழை பார்க்கவும்.

இன்ஜினியர்ஸ்  இந்தியாவில் வேலை

பொறியியல் ஆலோசனை அளிப்பதில் முன்னணி நிறுவனமாக டெல்லியை சேர்ந்த இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் விளங்குகிறது. சிறந்த ஆலோசனைகளை பொறியியல் துறைக்கு அளிப்பதன் மூலம் நாட்டின் கட்டமைப்பை அதிகரிக்க உதவுகிறது. அதில் பங்கேற்க பொறியியல் படிப்பை 2010 முதல் 2011க்குள் முடித்த இளம் பொறியியல் பட்டதாரிகளை ‘மேலாண்மை பழகுனர்’ பதவிக்கு தேர்வு செய்கிறது. மொத்த பணியிடங்கள் 40. தேவைக்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். தகுதி: பிஇ/பிடெக்/பிஎஸ்சி பொறியியல் படிப்பில் 65 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்ணுடன் பட்டம். பிரிவுகள்: மெக்கானிகல், கெமிக்கல், சிவில், எலக்டிரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்டிரானிக்ஸ், கம்யூனிகேஷன்ஸ், கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி. அதிகபட்ச வயது வரம்பு: 01.07.2011 நிலவரப்படி 25 வயது. மேலும் விவரங்கள் அறியவும், ஆன்லைன் விண்ணப்பத்துக்கும் ஷ்ஷ்ஷ்.மீஸீரீவீஸீமீமீக்ஷீsவீஸீபீவீணீ.நீஷீனீ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக