*இரவு 9.30 மணி: சித்தேரி அருகே ரயில்கள் மோதி விபத்து.
*9.45 மணி: அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல்.
*10.30 மணி: உள்ளூர் போலீசார், தாசில்தார் ரவி, அரக்கோணம் ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பால்ராஜ், தீயணைப்பு மீட்பு படையினர், ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைவு.
*11.15 மணி: சம்பவ இடத்தை கலெக்டர் நாகராஜன், எஸ்.பி ஏ.ஜி.பாபு, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி ஆகியோர் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
*12 மணி: வடக்கு மண்டல ஐஜி சைலேந்திரபாபு விபத்து பகுதிக்கு வருகை. அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, சோளிங்கர் எம்எல்ஏ மனோகர் அரசு மருத்துவமனைக்கு வருகை.
*12.30 மணி: அமைச்சர்கள் டாக்டர் வி.எஸ்.விஜய், முகமதுஜான் ஆகியோர் படுகாயம் அடைந்தவர்களை சந்தித்தனர். படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ், தனியார் பஸ் மூலம் சென்னை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
*1 மணி: ரயில்வே ஐஜி சுனில்குமார், தெற்கு ரயில்வே அதிகாரிகள் விபத்து பகுதியை பார்வையிட்டனர்.
*1.30 மணி: ‘தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்‘ மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
*2 மணி: பயணிகள் ரயிலின் சேதமடைந்த 2 பெட்டிகளை தவிர்த்து மற்ற பெட்டிகள் மீட்கப்பட்டது.
*3 மணி: தெற்கு ரயில்வே சார்பில் Ôவிபத்து மீட்பு ரயில்Õ சம்பவ இடத்துக்கு வருகை.
*3.30 மணி: இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 உடல்கள் மீட்கப்பட்டன.
*அதிகாலை 4.30 மணி: இடிபாடுகளில் சிக்கிய ரயில்பெட்டிகள் வெட்டி எடுக்கப்பட்டன.
*5 மணி: அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த உடல்கள் தனித்தனியாக வைக்கப்பட்டன.
*6 மணி: இறந்தவர்கள் உடல்களை உறவினர்கள் அடையாளம் காட்டி கதறி அழுதனர்.
*7.30 மணி: மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.
*9 மணி: பிரேத பரிசோதனை செய்ய அரக்கோணம் மருத்துவமனைக்கு டாக்டர்கள் குழு வருகை.
*10 மணி: பிரேத பரிசோதனை தொடங்கியது.
*11 மணி: இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
*மதியம் 12.30 மணி: காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ரயில்வே அமைச்சர் திரிவேதி ஆறுதல்.
*1 மணி: எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆறுதல், விபத்து பகுதியை ரயில்வே அமைச்சர் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.
*1.30 மணி: முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு மருத்துவமனையில் ஆறுதல்.
*2 மணி: காட்பாடி&அரக்கோணம் மார்க்கத்தில் மீட்புப்பணி முடிந்தது.
*2.25 மணி: ரயில் போக்குவரத்து தொடங்கியது.
*3 மணி: அரக்கோணம்&காட்பாடி மார்க்கத்தில் கிடந்த சேதம் அடைந்த ரயில் பெட்டிகள் அகற்றம்.
*4 மணி: மின் வயர் சரிசெய்யும் பணி நடந்தது.
*5 மணி: அரக்கோணம்&காட்பாடி மார்க்கத்தில் உள்ள தண்டவாளம் சரிசெய்யும் பணி நடந்தது.
ரயில் விபத்தில் பரிதாபம் மகனூக்கு பிறந்த நாள் பரிசு வாங்க சென்றவர் உட்பட 2 ரயில்வே ஊழியர்கள் பலி
வாலாஜா : அரக்கோணம் அடுத்த சித்தேரியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த ரயில் விபத்தில் வாலாஜா ரயில் நிலைய அதிகாரி கிரீஷ்குமார்(31) பலியானார். இவர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர். இவரது மனைவி ஜோதி குமாரி. இவர்களது ஆண் குழந்தை தேவேஷ் ஆனந்த்(1). ரயில்வே தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் கிரீஷ்குமார் வெற்றி பெற்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், வாலாஜா ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியில் சேர்ந்தார்.
அம்மூர் ரயில்வே குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இன்று இவரது குழந்தை தேவேஷ் ஆனந்தின் பிறந்த நாள் விழா கொண்டாட அரக்கோணம் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு, அரக்கோணம்& காட்பாடி பயணிகள் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, நடந்த விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
வாலாஜா ஊழியர்: தலங்கை ரயில் நிலையம் அருகில் வசிப்பவர் சிவலிங்கம். இவர் காட்பாடி ரயில் நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சாந்தி. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவருக்கு நேற்றுமுன்தினம் சிவலிங்கம், அரக்கோணம் மருத்துவமனைக்கு சென்று, உணவு கொடுத்துவிட்டு வீட்டுக்கு அரக்கோணம்&காட்பாடி ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. இவரது மூத்த மகன் அரக்கோணம் ரயில்வேயில் பயிற்சியாளராக வேலை செய்கிறார்.
பலியானவர்கள் விவரம்
அரக்கோணம் : அரக்கோணம் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் விவரம் வருமாறு:
1. ரகு(20) த/பெ.சண்முகம், மேல்வீராணம்.
2. பரசுராமன்(30) த/பெ.ஆறுமுகம், மேல்வீராணம்.
3. சேட்டு(30) த/பெ. சுப்பிரமணி, கீழ்ஆவதம்.
4. கவிதா(35), க/பெ.ராஜா, கீழ்வீராணம். இவருக்கு உதயமூர்த்தி(11) என்ற மகனும், பார்கவி(9) என்ற மகளும் உள்ளனர்.
5. விநாயகம்(35), த/பெ.பெருமாள், புலிவலம். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு வினோத்(10) என்ற மகனும், நித்யா(8) என்ற மகளும் உள்ளனர். கட்டிட தொழிலாளி.
6. கிரீஷ்குமார்(31), வாலாஜா ரயில் நிலைய அதிகாரி. த/பெ.சந்திரசேகரர் லால்தாஸ்.
7. ரகுநாத்(48), த/பெ.ராஜ், தென்றல் நகர், ஏலகிரிமலை, ஜோலார்பேட்டை. அரக்கோணம்&காட்பாடி செல்லும் பயணிகள் ரயிலின் கார்டு.
8. முனியப்பன்(17), த/பெ.மணி, பைரவர் காலனி, பானாவரம்.
9. சிவலிங்கம்(52), தலங்கை.
10. சதீஷ்குமார்(22), த/பெ.பழனி, மேல்கண்டிகை, சித்தேரி.
ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பினார் டிரைவர்
விபத்துக்கு காரணமான மின்சார ரயிலை சுந்தரம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதப்போகிறது என்பதை தெரிந்து கொண்ட அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். படுகாயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இருக்கும் இடத்தை தேடி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணைக்காக விரைந்துள்ளனர்.
மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிப்பு
அரக்கோணம் ரயில் விபத்தையடுத்து அந்த மார்க்கத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முன்தினம் வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டன. நேற்றும் 11 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டன. மேலும் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன.
பயணிகள் புறநகர் மின்சார ரயில்களையே நம்ப வேண்டிய நிலை. விபத்து நடந்த அன்றிரவு ஆங்காங்கே நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள் நேற்று விடியற்காலை முதல் மெல்ல இயங்க ஆரம்பித்தன. அடுத்தடுத்து ரயில்களை இயக்கியதால் அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கங்களில் ரயில்கள் தாமதமாக இயங்கின.
தற்காலிக கட்டுப்பாட்டு அறை
ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. அதில், 4 அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பயணிகளின் உறவினர்கள் மற்றும் பயணிகள் கேட்கும் சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் அளித்தனர். ஏராளமானோர் போனிலும், நேரிலும் தகவல்களை பெற்றுச் சென்றனர்.
முதலுதவி மருத்துவ மையம்
ரயில் விபத்தில் காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ஏராளமானவர்களை கொண்டு வந்தனர். அவர்களுக்கு அவசர முதல் உதவி சிகிச்சை அளிக்க சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்காலிக முதல் உதவி மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மருத்துவர்களும், செவிலியர்களும் தயார் நிலையில் இருந்தனர். சிலருக்கு சிகிச்சையும் அளித்தனர்.
முழு கட்டணமும் ஒப்படைப்பு
ரயில் விபத்து காரணமாக சென்ட்ரலில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. சில ரயில்கள் மாற்று பாதை வழியாகவும் இன்னும் சில ரயில்கள் தாமதமாகவும் புறப்பட்டன. ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்திலும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு முழு கட்டணமும் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதனால், அந்த பகுதிகளில் கூட்டம் அலை மோதியது.
தீவிர சிகிச்சை
ரயில் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 10 பெண்கள் உள்பட 36 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படடனர். அவர்களுக்கு அரசு பொது மருத்துவமனையில் உள்ள டவர் 2ல் 3வது மாடியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் சிலருக்கு வேறு அறையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி (25), போதி மணி, வேந்தா (35), சுஜாதா (28), மஞ்சுளா (25), வசீதா (48), ரோசம்மா (45), மல்லிகா (35), நிரோஷா (17), கீதா (19), கருணாகரன் (25), சத்தியசீலன் (38), வரதராஜன் (58), ராஜ்குமார் (39), படவேட்டான் (45), ரமேஷ் பாபு (35), ராஜா (21), கமலக் கண்ணன் (32), விஜய் (18), மோகன் (18), மலையன் (40), வெங்கடேசன் (24), கேசவன் (25), குமார் (40), முருகன் (35) மற்றொரு முருகன் (40), கோபால கிருஷ்ணன் (46), ஏழுமலை (30), வரதராஜன் (45), ஜானகிராம், சுந்தரம் (38), சங்கர் (25), வினோத் குமார் (20) உள்பட 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உணவு வழங்கவில்லை
ரயில் விபத்தில் பலத்த காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள 2வது டவரின் 3வது தளத்தில் உள்ள 233வது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு முறையான உணவு எதையும் மருத்துவமனை சார்பாக இலவசமாக வழங்கவில்லை. இதனால், காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் வெளியே சென்று உணவு வாங்கி கொடுத்தனர். வெளியூரைச் சேர்ந்த அவர்களுக்கு ஓட்டல் எங்கு இருக்கிறது என்று தேடி தடுமாறியது பரிதாபமாக இருந்தது.
அமைச்சர் மாயம் போலீசார் திண்டாட்டம்
விபத்தில் சிக்கி காயம் அடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி நேற்று காலை நேரில் சென்று நலம் விசாரித்தார். 3வது மாடிக்கு சென்ற அவர் திரும்பி வரும் போது எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதனால் அதிகாரிகளும், போலீசாரும் அமைச்சர் எங்கு சென்றார் என்று தெரியாமல் இங்கும், அங்குமாக ஓடிக் கொண்டிருந்தனர். இறுதியில் வேறு வழியாக நடந்து வந்தார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விசிலடித்து தொந்தரவு செய்த காவலாளிகள்
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காயம் பட்டவர்களை கவனித்து வந்தனர். அங்கு சில பொது மக்களின் நடமாட்டமும் இருந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த அரசு பொது மருத்துவமனை காப்பாளர்கள் விசில் அடித்து அனைவரையும் விரட்டினர். சத்தம் காதை பிளந்தது. இதனால், சிகிச்சை பெற்றவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். மேலும், காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் காலதாமதமும், ஸ்கேன் எடுப்பதில் தேக்க நிலையும் இருந்தது.
அமைச்சர் பேட்டி
ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி சிகிச்சை பெற்று வருபவர்களை சென்னை அரசு பொது மருத்துவமனையில் பார்த்து விட்டு வெளியே வரும்போது கூறியதாவது: ரயில் விபத்து துரதிர்ஷ்டவசமானது. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. பின்னால் வந்து மோதிய மின்சார ரயில் வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்ல சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளோம். உயிர் இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். விபத்துக்கான காரணம் குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக