AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 15 செப்டம்பர், 2011

ஆஸ்திரேலிய ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு உணவு பரிமாறும் “ரோபோ”க்கள்


ஆஸ்திரேலிய ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு “ரோபோ”க்கள் உணவு பரிமாற உள்ளன.  
 
 ஆஸ்திரேலியாவில் ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக கடத்த 2008-ம் ஆண்டு கார்லிங் கமிஷன் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான சத்தான உணவு வகைகளை வழங்க ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.
 
அதை தொடர்ந்த சிட்னியில் உள்ள ராயல் நார்த் ஷோர் என்ற ஒரு தனியார் ஆஸ்பத்திரி சத்தான உணவுகளை எந்திர மனிதன் என்றழைக்கப்படும் “ரோபோ”க்கள் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது.   அதற்கான ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு அதில் அவற்றின் செயல் பாடுகள் பதிவு செய்யப்பட் டிருக்கும்.
 
இந்த ரோபோக்கள் கம்ப்யூட்டர் டிராலியின் மூலம் ஆஸ்பத்திரி முழுவதும் வலம் வரும். நோயாளிகளுக்கு தேவையான உணவு வகைகள், துணி மணிகள் மற்ற பொருட்களை வழங்கும். இவை நடமாடும் வழித்தடங்களும் கம்ப் யூட்டரில் பதிவு செய்யப் படும். அதன்படி அவை செயல்படும்.
 
நோயாளிகளுக்கு ரோபோக்கள் உணவு வழங்கும் செயல்பாடு அடுத்த ஆண்டு இறுதியில் நடை முறைக்கு வரும் என ராயல் நார்த் ஷோர் ஆஸ்பத்திரி அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக