முட்டையில் புரோட்டீன் வைட்டமின்கள், மினரல்கள் அதிக அளவில் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் இதயநோய் வராமல் தடுக்கும். மேலும் இதயத்தை நன்றாக இயங்கச் செய்யும். இதற்காக தினமும் நிறைய முட்டைகள் சாப்பிடத் தேவையில்லை. தினமும் ஒரே ஒரு முட்டை மட்டும் சாப்பிட்டால் இதயம் நன்றாக இயங்கும்.
அரிப்பெர்ட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில்மேற்கண்ட தகவல் தெரியவந்துள்ளது. அந்த விஞ்ஞானிகள் கூறும்போது, "முட்டை உணவு பற்றி நாங்கள் நடத்திய ஆய்வில் இதயத்தை பாதுகாக்கும் 2 அமினோ அமிலங்கள் அதில் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம்'' என்றனர்.





0 கருத்துகள்:
கருத்துரையிடுக