AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 14 செப்டம்பர், 2011

பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிப்போர்புதிய படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்


கடலூர்:பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் வரும் 19ம் தேதி முதல் புதியதாக வடிவமைக்கப்பட்ட மனுவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பாஸ்போர்ட் மையத்தில் 19ம் தேதி முதல் பாஸ்போர்ட் கோரி பெறப்படும் மனுக்கள் தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகள் வருமாறு:புதியதாக வடிவமைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். புதிய விண்ணப்பப்படிவம் வெளிவிவகாரத் துறை அமைச்சக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மாவட்ட பாஸ்போர்ட் மையத்தில் 18 வயதுக்குட்பட்டவர் உட்பட அனைவருக்கும் புதிய பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்கள் மட்டும் பெறப்படும். விண்ணப்பத்தாரர்கள் புதிய படிவத்தில் பேனாவால் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பழைய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கப்படும் மனுக்கள் பெறப்படமாட்டாது.விண்ணப்பக் கட்டணம் மண்டல கடவுச்சீட்டு அலுவலர், சென்னை என்ற முகவரியிட்டு சென்னையில் பெறத்தக்க வகையிலான வரைவு கேட்போலையாக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

பாஸ்போர்ட் மையத்தில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களின் நிலை குறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் புதிய 15 இலக்க கோப்பு எண் விவரம் இளையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.மாவட்ட பாஸ்போர்ட் மையங்களில் 15ம் தேதி வரை மட்டுமே பழைய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.இதர சேவை வேண்டுவோர் சாலிகிராமம், நெல்சன் மாணிக்கம் சாலை, தாம்பரம் ஆகிய பாஸ்போர்ட் மையங்களில் நேரடியாக சென்று விசாரித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக