சனி, 13 ஜூலை, 2013
கொள்ளுமேடு இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்
புதன், 3 ஜூலை, 2013
M.S.முஹம்மது பைசல் - முபுஸிரா பானு திருமணம்
சிம் கார்டு வாங்க கைரேகை கட்டாயமாகிறது…!
டெல்லி: மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய சிம் கார்டு நம்பர் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் கைரேகை அல்லது உடல்சார்ந்த ஏதேனும் ஒரு சான்றை கட்டாயமாக அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
செவ்வாய், 2 ஜூலை, 2013
சவூதி வாழ் இந்தியர்களுக்கு ஓர் நற்செய்தி
சவூதி அரேபிய சட்டத்திற்கு புறம்பாக வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடியுரிமையை சரி செய்துக்கொள்ள மூன்று மாத கெடு நாளையோடு (ஜூலை 3) முடிவடைவதாக அறிவித்திருந்தது.. அதன்பிறகு சிறைவாசம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்து வந்தது.
இதனடிப்படையில் அந்தந்த நாட்டு தூதரகங்கள் தன் மக்களுக்கு உதவும் விதமாக வேலைவாய்ப்பு முகாம் மற்றும் நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு சட்ட சிக்கல்களை முடித்துக்கொடுப்பது போன்ற உதவிகளை செய்துவந்தது. இறுப்பினும் ஐம்பது விழுக்காடுகூட முடிவடையாத நிலையில் இருந்துவந்தது. இதற்கான கால அவகாசம் போதவில்லை என்று தூதரகங்கள்,பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சவூதி அரசாங்க அலுவலகங்களும் கூறிவந்தது. இந்த கோரிக்கையை அரசர் அப்துல்லாஹ் இன்று ஏற்றுக்கொண்டு இதற்கான கெடு முஹர்ரம் 1, 1435 (நவம்பர் 4,2013) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 30 ஜூன், 2013
அமீரகத்தின் TOP 10 இந்தியர்கள்
துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட மாகாணங்களை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் தொழில் தொடங்கி வெற்றியாளர்களாக விளங்கும் இந்தியர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு, அவர்களின் பணியாட்களின் எண்ணிக்கை, வர்த்தக வரவு – செலவு, அவர்கள் அறப்பணிக்கு செலவிடும் தொகை, அவர்களின் ஆளுமை என பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலின் படி வளைகுடாவில் 100க்கும் மேற்பட்ட லூலு அங்காடிகளை கொண்டுள்ள எம்கே குழுமத்தின் தலைவர் யூசுப் அலி முதலிடத்திலும், மேக்ஸ், செண்டர் பாயிண்ட் முதலான ரீடெயில் வணிக கடைகளை வைத்துள்ள லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவர் மிகி ஜக்தியானி இரண்டாம் இடத்திலும் யூ.ஏ.ஈ எக்ஸ்சேஞ்ச் மற்றும் என்.எம்.சி மருத்துவமனைகளின் தலைவர் பி.ஆர்.ஷெட்டி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
வெள்ளி, 28 ஜூன், 2013
நோன்பு கஞ்சிக்கான அரிசியை முன்கூட்டியே வழங்க தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை
சென்னை: ரமலான் நோன்பு துவங்கும் முன்பே நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கட்சி தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், பொருளாளர் எம்.எல்.ஏ.ஷாஜகான், எம்.அப்துல் ரகுமான் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதன், 26 ஜூன், 2013
தி.மு.க.,விற்கு ஆதரவு அளித்ததால் மனித நேய மக்கள் கட்சினர் விலகல்
- மனித நேய மக்கள் கட்சியில் இருந்து கடலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் திடீரென விலகியுள்ளனர்.மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்த அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிக்காமல் தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்த கட்சியின் தலைமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காட்டுமன்னார்கோவிலில் எதிர்ப்புக் கூட்டம் போடப்பட்டது.
செவ்வாய், 25 ஜூன், 2013
கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு
கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு இன்று (25-06-2013 செவ்வாய் கிழமை) சிதம்பரத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மமகவின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது மமக மாநில அமைப்பு செயலாளர்கள் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன் எஸ்.சம்சுதீன் நாசர் உமரி மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடந்த மாதம் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையின் படி கட்சியிலிருந்து மானியம் ஆடூர் மெஹராஜுதீன் நீக்கப்பட்டதற்கான காரணங்களை கழக செயல் வீரர்களுக்கு தலைமை நிர்வாகிகள் தகுந்த ஆதாரத்துடன் விளக்கினர்.
ஞாயிறு, 23 ஜூன், 2013
சவூதி: வார விடுமுறை நாள்கள் மாற்றம்!
சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் இன்று வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றின் மூலமாக
சவூதி வார விடுமுறை நாள்களை வியாழன் வெள்ளி என்பதிலிருந்து வெள்ளி, சனி என்று மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
1). அமைச்சகங்கள், நிதியகங்கள், அரசு அலுவலகங்கள், சவூதி மைய வங்கி, பங்குச் சந்தை, ஆகியவை இனி ஞாயிறு முதல் வியாழன் வரை இயங்கும். வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் இனி வார விடுமுறையாகக் கருதப்படும். இந்த மாற்றம் இம்மாதம் 29 ஜூன் முதலே நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழகத்தில் பள்ளி நேரம் மாற்றம் : நாளை முதல் அமல்
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளின் பாடவேளை மற்றும் பள்ளி தொடங்கும் நேரமும் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சனி, 22 ஜூன், 2013
இந்திய தேசிய லீக் கட்சியுடன் தேசிய லீக் இணைந்தது
இந்திய தேசிய லீக் கட்சியுடன், தேசிய லீக் கட்சி இணைந்தது. கட்சியின் தமிழ்நாடு தலைவராக, பஷீர் அகமது நியமிக்கப்பட்டுள்ளார் என்று, இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் முகமது சுலைமான் அறிவித்தார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கட்சியின் தலைவர் முகமது சுலைமான் தலைமை தாங்கினார். கூட்ட முடிவில், முகமது சுலைமான் நிருபர்களிடம் கூறியதாவது:–
வெள்ளி, 21 ஜூன், 2013
வியாழன், 20 ஜூன், 2013
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர், : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கலுக்காக விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 10&1&2013 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தொடர்ந்து வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக படிவம் 7லும், நீக்குதல் தொடர்பாக படிவம் 6லும், பெயர், முகவரி மற்றும் புகைப்பட திருத்தங்கள் தொடர்பாக படிவம் 8லும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு மாற்றம் செய்தவர்கள் தங்களது பெயர்களை புதிய முகவரிக்கு மாற்றம் செய்து கொள்ள படிவம் 8ல் விண்ணப்பிக்கலாம்.
வீராணம் ஏரி வற்றியதால் வெற்றிலை கொடிக்கால்கள் அழியும் அபாயம்
வீராணம் ஏரி வறண்டதால் வெற்றிலை கொடிக்கால்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.
காட்டுமன்னார்கோவில் பகுதி வீராணம் ஏரி கரையில் உள்ள திருச்சின்னபுரம், கொள்ளுமேடு, மானியம் ஆடூர், நத்தமலை, கந்தகுமாரன், கொல்லமலை கீழ்பாதி என பல்வேறு
பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வெற்றிலை பயிர் பல்லாண்டு பயிராகும். மேட்டு பாத்திகள் அமைத்து நடவு செய்யப்படும். வெற்றிலை பயிருக்கு அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
இந்த ஆண்டு வீராணம் ஏரி வறண்டதால் தண்ணீர் இல்லாமல் இந்த பகுதிகளில் வெற்றிலை கொடிக்கால்கள் காய்ந்தன. ரூ. 2.5 லட்சம் வரை செலவு செய்து விட்டு விவசாயிகள் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து போய் உள்ளனர்.
புதன், 19 ஜூன், 2013
மேல்சபை தேர்தலில் தி.மு.க.வுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு: ஜவாஹிருல்லா
டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் கனிமொழிக்கு தி.மு.க. தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசினர்.
சி.ஐ.டி காலனியில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டில் பகல் 1 மணி அளவில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
செவ்வாய், 18 ஜூன், 2013
முழுமையாக நீக்க முடியாது ஜூலை 1ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் குறையும்
புதுடெல்லி: தேசிய ரோமிங் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் கட்டணத்தை, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) குறைத்துள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் கட்டணக் குறைப்பு அமலுக்கு வருகிறது.ரோமிங் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்திருந்தார்.
திங்கள், 17 ஜூன், 2013
வெளிநாட்டு ஹஜ் பயணிகளுக்கான அனுமதி 20 சதவீதம் குறைப்பு உறுதி: சவுதி அரசு முடிவு
சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு 'ஹஜ்' புனித யாத்திரை செய்ய வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை அந்நாட்டு அரசாங்கம் 20 சதவீதம் குறைத்துள்ளது.
10 லட்சம் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது.
ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், கடந்த (2012) ஆண்டு இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்தனர்.
ஞாயிறு, 16 ஜூன், 2013
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு அதன் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ அவர்கள் தலைமையில் 15.06.2013 அன்று தஞ்சையில் நடைபெற்றது. மூத்த தலைவர்கள் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் ஸமது, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைத் தலைவர் குணங்குடி ஆர். எம். ஹனிபா, துணைப் பொதுச் செயலாளர் கோவை உமர் உட்பட 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்குக் கொண்டார்கள். இந்த செயற்குழுவில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. தமிழகத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வேண்டும்
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு 3.5 சதவீதம் என்பது முஸ்லிம் சமுதாயத்தின் பின்னடைந்த தன்மைக்குப் பொருத்தமற்றதாக உள்ளது. இந்த இடஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட்டால் மட்டுமே முஸ்லிம் சமுதாயம் பயனடையும் என்பதையும், 3.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி நடந்துள்ள கடந்தகால அரசுப் பணி நியமனங்களில் முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருப்பதையும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிமுக பொதுச் செயலாளரிடம் நம்மால் சுட்டிக் காட்டப்பட்டது.
சனி, 15 ஜூன், 2013
வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தல்: வரும் 17 முதல் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வரும் 17 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் அலுவலர் க.அருள்மொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:
வக்ஃபு வாரிய உறுப்பினர் தேர்தலுக்கு முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பிரிவுகளுக்கு தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















