AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 2 ஜூலை, 2013

சவூதி வாழ் இந்தியர்களுக்கு ஓர் நற்செய்தி


சவூதி  அரேபிய சட்டத்திற்கு புறம்பாக வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடியுரிமையை சரி செய்துக்கொள்ள மூன்று மாத கெடு நாளையோடு (ஜூலை 3)  முடிவடைவதாக அறிவித்திருந்தது.. அதன்பிறகு சிறைவாசம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்து வந்தது.


இதனடிப்படையில் அந்தந்த நாட்டு தூதரகங்கள் தன் மக்களுக்கு உதவும் விதமாக  வேலைவாய்ப்பு முகாம் மற்றும் நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு சட்ட சிக்கல்களை முடித்துக்கொடுப்பது போன்ற உதவிகளை  செய்துவந்தது. இறுப்பினும் ஐம்பது விழுக்காடுகூட முடிவடையாத நிலையில் இருந்துவந்தது. இதற்கான கால அவகாசம் போதவில்லை என்று தூதரகங்கள்,பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள்  மற்றும் சவூதி அரசாங்க அலுவலகங்களும் கூறிவந்தது. இந்த கோரிக்கையை அரசர் அப்துல்லாஹ் இன்று ஏற்றுக்கொண்டு இதற்கான கெடு முஹர்ரம் 1, 1435 (நவம்பர் 4,2013) வரை  நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த தகவல் சவூதியில் வசிக்கும் பிறநாட்டு மக்களுக்கு நன்றி கலந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதை முறையாக பயன்படுத்திக்கொள்ளும்படி கொள்ளுமேடு மக்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகின்றது..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக