- மனித நேய மக்கள் கட்சியில் இருந்து கடலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் திடீரென விலகியுள்ளனர்.மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்த அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிக்காமல் தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்த கட்சியின் தலைமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காட்டுமன்னார்கோவிலில் எதிர்ப்புக் கூட்டம் போடப்பட்டது.
- கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட தலைவர் மெகராஜதீன் தலைமை தாங்கினார். கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைமையின் முடிவை எதிர்த்து மெகராஜதீன் தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தனர்.
புதன், 26 ஜூன், 2013
தி.மு.க.,விற்கு ஆதரவு அளித்ததால் மனித நேய மக்கள் கட்சினர் விலகல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக