AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

டெட்ராய்ட் : உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க தினமும் காலையில் ‘ஜிம்’ போய் உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பல் கொள்பவரா நீங்க...? இனி, ஒரு சாக்லெட் பார் சாப்பிட்டு விட்டு போர்வைக்குள் ஒளிந்து தூக்கத்தை தொடரலாம் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரில் உள்ள வேய்ன் பல்கலைக்கழகம். அதன் ஆராய்ச்சி பேராசிரியர்கள் குழு, சாக்லெட் அளிக்கும் நன்மைகள் பற்றி தீவிர ஆய்வு நடத்தினர். 

உடற்பயிற்சிக்கும் சாக்லெட்டுக்குள் உள்ள தொடர்புகள் பற்றி ஆராய்ந்தனர். தீவிர உடற்பயிற்சி மற்றும் ஜாகிங் செய்யும்போது உடல் தசைகளை இறுகச் செய்யும் எபிகாடெக்கின் என்ற வேதிப்பொருள் சாக்லெட்டிலும் இருப்பது தெரிய வந்தது. உடற்பயிற்சி செய்வதால் தசைக்கு அளிக்கப்படும் ஊக்கம் போலவே சாக்லெட்டில் இருக்கும் எபிகாடெக்கின் செயல்படுவது உறுதியானது. 

இதுபற்றி எலியிடம் நடத்திய ஆய்விலும் தசைக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் இந்த வேதிப்பொருள் சிறப்பாக செயல்படுவது தெரிந்தது. இதையடுத்து, தினமும் சாக்லெட் சாப்பிட்டால் கடின உடற்பயிற்சி செய்வதற்கு நிகரான பலனை பெற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சி குழுவை சேர்ந்த டாக்டர் மோ மெலேக் கூறியதாக டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியதாவது: 

ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றால் எபிகாடெக்கின் அதிகரித்து தசை செல்கள் ஊக்கம் பெறுகின்றன. அதே பயன் சாக்லெட்டில் உள்ள எபிகாடெக்கிலும் கிடைக்கிறது. குறிப்பாக, இதயம் மற்றும் எலும்புகளை சுற்றியுள்ள தசைகளில் இது சிறப்பாக செயல்படுகிறது. எனவே, உடற்பயிற்சியின் பயனை சாக்லெட் அளிக்கும். எலியிடம் நிரூபணமான இந்த ஆராய்ச்சி மனிதருக்கும் பொருந்தும் இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு முடிவுகள் சைக்காலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக