புதுடெல்லி : மத்திய அரசின் புதிய தொலைத் தொடர்பு கொள்கை 2011 வரைவு அறிக்கையில் நாடு முழுவதும் செல்போன் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வெளியூர், வெளிமாநில பயணம் செய்வோருக்கு செலவு குறையும். போன் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கும்.
தொலைத் தொடர்பு கொள்கை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அது இப்போதைய சூழ்நிலையில் ஏற்றதாக இல்லை என்பதால் புதிய தொலைத் தொடர்பு கொள்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது. அதன் வரைவு அறிக்கையில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, போன் நிறுவனங்களுக்கு பல மண்டலங்களாக பிரித்து உரிமம் அளிக்கும் நடைமுறையை மாற்றி நாடு முழுவதும் செயல்பட உரிமம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ஒரு மண்டலத்தை சேர்ந்த செல்போன் வாடிக்கையாளர் வெளியூர், வெளிமாநில பயணம் மேற்கொண்டால் அந்த மண்டலத்தின் போன் நிறுவனத்துக்கு ரோமிங் கட்டணம் செலுத்தும் இப்போதைய நிலை இருக்காது.
எனவே, நாடு முழுவதும் செல்போன் வாடிக்கையாளர்கள் எங்கு பயணம் செய்தாலும் ரோமிங் கட்டணம் இருக்காது என்பதால், வாடிக்கையாளரின் போன் செலவு கணிசமாக குறையும். குறிப்பாக, அடிக்கடி வெளியூர் பயணம் செய்வோருக்கு இது அதிக சிக்கனம் ஏற்படுத்தும்.
அதேபோல, செல்போன் எண்ணை மாற்றாமல் போன் நிறுவனத்தை மாற்றும் வசதியும் (எம்என்பி) குறிப்பிட்ட மண்டலத்துக்குள் மட்டுமே இப்போது அனுமதிக்கப்படுகிறது.
புதிய தொலைத் தொடர்பு மசோதா நடைமுறைக்கு வந்தால், போன் நிறுவனங்களின் உரிமம் நாடு தழுவிய அளவில் மாறும் என்பதால் எம்என்பி வசதியையும் எங்கு வேண்டுமானாலும் பெற முடியும்.
மசோதாவில் இடம்பெற்றுள்ள இந்த அம்சங்களுக்கு போன் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என்று தெரிகிறது. எனினும், வாடிக்கையாளர்களுக்கு நன்மை அளிக்கும் இவற்றை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக