AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

பத்லா இல்ல என்கவுன்டர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தல்!

புதுடெல்லி: பத்லா இல்ல என்கவுன்டர் நடந்து மூன்றான்று நிறைவு பெற்றதையொட்டி, இந்த சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த கோரி ஜந்தர் மந்தரில் முஸ்லிம் அமைப்பு ஆர்ப்பாட்டம் செய்தது. 
டெல்லியில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி 5 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 60க்கும் அதிகமானோர் இறந்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரே வாரத்தில் 19ம் தேதியன்று, இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் பத்லா இல்லத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்க தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இல்லத்தை போலீசார் முற்றுகையிட்டனர். அதில் பதுங்கியிருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. 
இதில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுட்டு கொல்லப்ட்டார். மேலும் இல்லத்தில் பதுங்கியிருந்த அதீப் அமீன், முகமது சஜ்ஜத் ஆகியோரும் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த 2 பேரும் தீவிரவாதிகள் என்று போலீசார் அறிவித்தனர். ஆனால், இருவரும் அப்பாவிகள், இவர்களுக்கும் குண்டு வெடிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முஸ்லிம் அமைப்புகள் அறிவித்தனர். போலீசார், போலி என்கவுன்டர் நடத்தி 2 அப்பாவிகளை சுட்டு கொன்றுள்ளனர் என்று குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இதே தினத்தில் ஜும்மா மசூதி அருகே தைவான் நாட்டை சேர்ந்த 2 பேரை தீவிரவாதிகள், பட்டப்பகலில் சுட்டு கொன்றனர். மேலும் கார் குண்டும்  வெடித்தது. இந்த சம்பவத்துக்கு இந்தியன் முஜாகுதீன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 
இந்த நிலையில் பத்லா இல்லா என்கவுன்டர் நடந்து 3 ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி, ராஷ்டிரிய உலிமா கவுன்சில் உட்பட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், பத்லா இல்லத்திலிருந்து ஜந்தர் மந்தருக்கு பேரணி நடத்தினர். பத்லா இல்ல என்கவுன்டர் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 
பின்னர், உலிமா கவுன்சிலின் ததலைவர் ஆமீர் ரஷாதி மதானி கூறியதாவது: பத்லா இல்ல என்கவுன்டரில் சுட்டு கொல்லபட்ட 2 இளைஞர்களும் அப்பாவிகள். இது பற்றி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்து விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. கடந்த 3 ஆண்டுகளாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வருகிறோம். ஆனால், முஸ்லிம்களின் நல விரும்பி என்று கூறி கொள்ளும் மத்தியில் ஆளும் காங்கிரஸ், இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இப்போது, அவர்கள் அப்பாவிகள் என்று தெரிய வந்துள்ளது. சிறையில் அவர்கள் பட்ட கஷ்டத்துக்கு என்ன நஷ்டஈடு? இவ்வாறு மதானி கூறினார்.
பத்லா இல்ல என்கவுன்டர் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்து. தசரா விழா முடியும் வரை இந்த  பாதுகாப்பு தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக