புதுடெல்லி: ஊழ லை ஒழிக்கவும், அதற்கு எதிரான தங்களது கடமைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், சி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை கொள்ள, அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சி.பி.எஸ்.சி தலைமை அலுவலகத்தில் இருந்து, இந்த பாடத் திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊழல் என்பது நல்ல நிர்வாகத்தையும், நிலையான மேம்பாட்டையும், ஜனநாயக நடவடிக்கை களையும் சீர்குலைத்துவிடுகிறது. பொதுச் சேவைகள் மற்றும் பொது நிர்வாகம் மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கையையும் இது தடுக்கிறது.
ஊழலை ஒழிப்பது தொடர்பாக ஆண்டு முழுவதும் மாணவரிடம், சி.பி.எஸ்.சி பள்ளிகள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
அக்டோபர் 31ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு, ஊழல் ஒழிப்பு வாரமாக மத்திய ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வாரம் முழுவதும் பள்ளிகளில் இதுதொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஊழல் ஒழிப்பு, அதற்கு எதிரான தங்களது கடமைகள் குறித்து பாடங்கள் நடத்தப்பட வேண்டும். மகாத்மா காந்தி, ஊழலுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் தண்டி யாத்திரை ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
வாரம் ஒரு முறை, அந்தந்த ஊரில் உள்ள தகவல் அறியும் சட்ட அலுவலகத்துக்கு மாணவர்களை அழைத்து சென்று அங்குள்ள நடைமுறைகளை விளக்க வேண்டும். அதேபோல் கலெக்டர், உயர் போலீஸ் அதிகாரிகள், சமூக சேவகர்கள் ஆகியோரை அழைத்து ஊழலுக்கு எதிராக செயல்படுவது குறித்து மாண வர்களிடம் விளக்க வேண்டும்.
மேலும், சுற்றுச்சூழல் குறித்தும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட வேண்டும். யமுனை நதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக