இங்கிலாந்தில் ஒரு தம்பதிக்கு தலை ஒட்டிய நிலையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு ரீடல், ரீடா கபோரா என்ற பெயரிட்டு வளர்த்தனர்.
தற்போது 11 மாத குழந்தைகளாக உள்ள இவர்களை லண்டனில் கிரேட் ஆர்மண்ட் தெருவில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் தனித்தனியாக பிரிக்க சேர்த்தனர்.
அவர்களை டாக்டர் டேவிட் துனாவே தலைமையிலான மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்தது. பரிசோதனையின் முடிவில் அக்குழந்தைகளை பிரித்தெடுப்பது சாத்தியம் என தெரிய வந்தது.
இதை தொடர்ந்து 4 கட்டமாக ஆபரேசன் நடத்தி இருவரையும் வெற்றிகரமாக தனித் தனியாக பிரித்தெடுத்தனர். இருவரின் ரத்த குழாய்கள் மற்றும் நரம்புகள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டது. தற்போது அவர்கள் இருவரும் மிக நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.





0 கருத்துகள்:
கருத்துரையிடுக